75000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற வைத்திய நிபுணர் கைது : டாக்குத்தர் ஐயாவுக்கு ரொம்ப பஞ்சம் போல

0
224

வைத்திய தொழில் என்பது ஒரு தூய்மையான புனிதமான தொழில் . மற்றைய தொழில்களை விட வைத்திய தொழில் அதிகம் மதிக்கப்படும் தொழிலாக உள்ளது .அதுவும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வைத்தியர்களை மக்கள் கடவுளாக தான் பார்க்கின்றனர்.முன்பெல்லாம் வைத்தியர்கள் என்பவர்கள் சேவை மனப்பான்மைகொண்டவர்களாக காணப்பட்டனர் . ஆனால் இன்றையகால வைத்தியர்களில் எத்தனை பேர் சேவை மனப்பான்மையுடன் சேவையாற்றுகின்றனர் என்பது கேள்விக்குறியே .

புனிதமான வைத்திய தொழிலுக்கு இழுக்கு சேர்க்கும் வைத்தியர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.குளியாபிட்டிய வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்திய நிபுணர் ஒருவர் தனியார் 75000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . தனியார் மருத்துவ ஆய்வுகூடம் ஒன்றில் 75000 ரூபா இலஞ்சத்தினை பெற்றுக்கொண்ட போது கையும் களவுமாக இந்த வைத்திய நிபுணர் பொலிசாரிடம் மாட்டியுள்ளார்.

அரச சம்பளம் , அதைவிட தனியார் மருத்துவமனைகளில் உழைக்கும் சம்பளம் போதாது என்று இந்த வைத்திய நிபுணர் இலஞ்சமும் வாங்கியுள்ளாரே என்று மக்கள் கடும் விசனம் அடைந்துள்ளனராம். அடிக்கடி பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதும் தங்கள் நியாயமற்ற ஒரு சில கோரிக்கைகளை நிறைவேற்ற புனிதமான வைத்திய தொழிலை பயன்படுவதும் என்ன நியாயம் என்று மக்கள் ஏற்கனவே கோபம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here