சோகத்தில் மாண்டிருந்த பிள்ளைகளை மரணத்தில் இருந்து மீண்டு வந்து ஆற்றுப்படுத்திய தாய்

0
208

வாகன விபத்தில் இறந்த கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் ஏழு நாட்களின் பின் மீண்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கடவத்தை, ரன்முத்துகம பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவருக்கு ஏழு பிள்ளைகள் இருக்கின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாகனம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த வாகனத்துடன் ஏற்பட்ட விபத்தில் குறித்த தாய் பரிதாபகரமாக உயிரிழந்தார் .

உயிரிழந்த தாயின் சடலத்தை அவரது பிள்ளைகள் மூவர் அடையாளம் காட்டிய பின்னர் உடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு பிள்ளைகளின் கண்ணீர் மல்க அடக்கம் செய்யப்பட்டது.

அம்மாவின் திடீர் இறப்பினால் மீள முடியாத அதிர்ச்சியிலும் சோகத்திலும் இருந்த பிள்ளைகளுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது .அம்மாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டு சரியாக ஏழு நாட்களின் பின்னர் அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் . அம்மாவை கண்ட பிள்ளைகள் அதிர்ச்சியில் வாயடைத்து போய்விட்டனராம் . இறந்த அம்மா எப்படி வருவார்?ஒரு வேளை ஆவியாக இருக்குமோ என்று பிள்ளைகள் குழம்பி போனார்கள் .
தங்கள் அம்மா தான் உயிருடன் வந்துள்ளார் என்பதை உறுதி செய்த பிள்ளைகள் ஆனந்தக்கண்ணீர் மல்க உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அம்மா சாகவில்லை உயிருடன் தான் இருக்கின்றார் என்று பிள்ளைகள் கூறியதை கேட்டு பொலிஸாரும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது , வேறு யாரோ ஒரு பெண்ணின் சடலத்தை கொண்டுவந்து அடக்கம் செய்தமை தெரியவந்துள்ளது.

அம்மாவின் இழப்பினால் சோகத்தில் மாண்டிருந்த பிள்ளைகளை சாவில் இருந்து மீண்டு வந்து மகிழ்ச்சிப்படுத்தியது ஒருபுறம் இருக்க தாயின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை அது தங்களது அம்மா இல்லை என்று அடையாளம் காண முடியவில்லையா என்பது வினோதமாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here