தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்று சொல்வார்கள்.தலைவன் என்பவன் மக்களுக்கு முன் உதாரணமாக திகழவேண்டும் . எளிமையான தலைவர்கள் மட்டுமே மக்களின் மனங்களில் இடம்பிடிப்பது வழக்கம் . இதற்கு உதாரணமாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா , பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் போன்றோரை குறிப்பிடலாம் .
இலங்கையின் வரலாற்றை பொறுத்த வரையில் இதுவரை காலம் பதவி வகித்த ஜனாதிபதிகளில் மைத்திரிபால சிறி சேன மிகவும் எளிமையான ஒரு தலைவராக இருந்து வருகின்றார். தன்னுடைய எளிமையான நடவடிக்கைள் மூலம் அவ்வப்போது போது மக்களை ஆச்சரியப்படுத்தும் மைத்திரி மீண்டும் தன்னுடைய எளிமையின் மூலம் மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் .
அண்மையில் மைத்திரியின் தலைமையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த நிகழ்விற்கு மைத்திரி கலந்து கொள்வதற்காக வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது வீதியின் அருகில் வசிக்கும் சிறுமி ஒருவர் ஜனாதிபதி பயணம் செய்த வாகனத்தை ஓடி வந்து புதினமாக பார்த்துள்ளார் .இதனை அவதானித்த மைத்திரி உடனடியாக வாகனத்தை நிறுத்தி வாகனத்தில் இருந்து இறங்கி சிறுமியின் அருகில் சென்று சிறுமியிடம் நலம் விசாரித்துள்ளார்.மைத்திரியின் இந்த செயற்பாட்டால் அந்த சிறுமி மகிழ்ச்சியில் மூழ்கி விட்டாராம் .அட ஜனாதிபதி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் வியப்படைந்துள்ளனர்.