யாழில் பூச்சாண்டி காட்டிய பொடிப்பயல்களை குண்டுக்கட்டாக அள்ளிய பொலிஸ் : கைதின் பின்னணி உள்ளே

0
159
Aava group

Aava group

ஆவா குழு என்று ஊடகங்களினால் பெயர் புனையப்பட்ட ஒரு ரவுடி கும்பலின் அட்டகாசம் யாழ்ப்பாணத்தில் தலைவிரித்தாடுகின்றது. இந்தக்குழுவின் பின்னணியில் முக்கிய அரசியல் புள்ளிகள் இருப்பதாக செய்திகள் கசிந்தன .அதன் பின்னர் ஆவா குழுவை கோத்தபாய ராஜபக்ச தான் இயக்குகின்றார் என்று கூறப்பட்டது.ஆனால் உண்மையில் ஆவா குழு என்பது வேலை வெட்டி இல்லாத பொடிப்பயல்களின் லக்கான் ,தனு ரொக்ஸ் என்ற இரு குழுக்கள் தான் என்ற உண்மை இப்போது வெளிவந்துள்ளது. தமிழ் ஊடகங்கள் இந்தக்குழுக்களை பெரிய அளவில் பில்டப் செய்து மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தின.

நிஷா விக்டர் என்ற பொடிப்பயல் யாழ்ப்பாணம் கொக்குவிலை சேர்ந்தவர்.இவர் லக்கான் என்று அழைக்கப்படும் ஒரு ரவுடிகள் குழுவின் உறுப்பினர்.மானிப்பாயை சேர்ந்த தனு என்ற பொடிப்பயல் இவர் தனு ரொக்ஸ் என்ற ரவுடிக்கும்பலின் நிறுவுனர் .

லக்கான் ரவுடிக்குழுவின் மாண்புமிகு மத்தியகுழு உறுப்பினர் பொடிப்பயல் நிஷா விக்டருக்கும் தனு ரொக்ஸ் ரவுடிக்குழுவின் நிறுவுனர் மற்றும் நிறைவேற்று அதிகாரி பொடிப்பயல், வெட்டிப்பயல் தனுவிற்கும் இடையில் நீண்டகாலமாக தனிப்பட்ட பிரச்னை இருந்துள்ளது .

அண்மையில் தனுவிற்கு போன் பண்ணிய நிஷா விக்டர், “டேய் இண்டைக்கு உன்னை வெட்டுவன். பார்க்குறியா பார்க்குறியா ” என்று தமிழ் சினிமா பாணியில் கூறியுள்ளார்.சரி பார்க்கலாம்டா என்று கூறி தனு தொலைபேசியை துண்டித்துள்ளார்.

தனு ரொக்ஸ் நிறுவுனர் தனு ஏற்கனவே வேறு பிரச்சனையில் மாட்டு பட்டு அவர் மீது கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு உள்ளது .அதனால் பொலிஸ் நிலையம் சென்று கையொப்பம் வைக்க வேண்டும் என்று பொலிஸார் பணித்துள்ளனர்.

பொலிஸ் நிலையம் சென்று கையொப்பம் வைக்க சென்றவேளை பொலிஸாரிடம் தனு, “சார் நிஷா விக்டர் எனக்கு கோல் எடுத்தவன்.இண்டைக்கு என்னை வெட்டுவன் எண்டு சொன்னவன்” என்று கூறியுள்ளார்.இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார் ,”பயப்புடாத.அப்புடி ஒன்றும் செய்ய முடியாது” என்றுஆறுதல் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.நிஷா விக்டரின் அச்சுறுத்தலினால் பீதியடைந்த தனு தலைமறைவாகினான்.

பொலிஸார் தனுவிற்கு சப்போர்ட் பண்ணி கதைத்ததை கேள்விப்பட்ட நிஷா விக்டருக்கு கோபம் பொங்கி வழிந்தது.இதனால் தனது குடும்பத்தார் வெளிநாட்டில் குளிரில் உறைந்து கஷ்டப்பட்டு உழைத்து அனுப்பிய பணத்தில் வாங்கிய மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்த நிஷா விக்டர், தனுவிற்கு சப்போர்ட் பண்ணிய பொலிசாரை தேடிச்சென்று சரமாரியாக வெட்டியுள்ளார்.இதனால் படுகாயம் அடைந்த பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

நிஷா விக்டர் போலிஸை வெட்டிட்டான் என்ற செய்தியை கேள்விப்பட்ட தனு “நிஷா பொலிஸை வெட்டிட்டான் .சோ வழமை போல ஒரு கிழமைக்கு வெளில வர மாட்டான்.நல்ல காலம் நாம தப்பிச்சம்” என்று பெருமூச்சு விட்டுள்ளான்.

நிஷா விக்டர் பொலிஸை வெட்டியதனால் அவன் வெளியே வர மாட்டான் என்ற நம்பிக்கையில் தனு வெளியே வந்து நடமாடியுள்ளான். இதனை கேள்விப்பட்ட நிஷா விக்டர் தனுவை தேடிச்சென்று வெட்டியுள்ளார்.இதனால் காயமடைந்த தனு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.

தனுவினை வெட்டியதனால் பொலிஸ் தன்னை தேடுவார்கள் என்ற அச்சத்தில் நிஷா விக்டர் தனது ரவுடி சகாக்களுடன் கொழும்புக்கு வந்துள்ளார். இந்த பொடிப்பயல்களின் ரவுடித்தனத்தை நீண்டகாலமாக பொலிஸார் கண்காணித்து வந்தனர். ஆனாலும் இந்தப்பொடிப்பயல்களை கைது செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்தனர்.

நிஷா விக்டர் பொலிசாரினை வெட்டியதால் கோபம் அடைந்த பொலிஸ் ரவுடி பயலுகளை கைது செய்ய முடிவு செய்தனர்.(தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம்).

லக்கான் மற்றும் தனு ரொக்ஸ் ரவுடி கும்பலை பிடிப்பதற்காக விசேட குற்றப்புலனாய்வு பொலிஸார் நியமிக்கப்பட்டு 14 நாட்கள் காவல்துறையின் காவல் வலயத்தில் இந்த இரண்டு ரவுடி குழுக்களை சேர்ந்த பொடிப்பயல்கள் கண்காணிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தான் நிஷா விக்டர் தனுவினை வெட்டிவிட்டு கொழும்புக்கு தப்பிச்செல்ல முடிவு செய்தார்.பொடிப்பயல்களை அள்ளுவதற்கு இது தான் சரியான தருணம் என்று முடிவு செய்த குற்றப்புலனாய்வு பொலிஸார் நிஷா விக்டர் கொழும்புக்கு வந்த அதே பஸ்ஸில் நிஷா விக்டரை பின்தொடர்ந்து வந்தனர்.

லைக்கா மற்றும் , தனு ரொக்ஸ் குழுவிற்கு கொழும்பில் உள்ள பாதாள உலக கோஷ்டியுடன் தொடர்புகள் ஏதாவது இருக்கின்றதா என்பதனை தெரிந்துகொள்வதும் பொலிஸார் நிஷா விக்டரை பின்தொடர்ந்தமைக்கான காரணமாக இருந்தது.

பொலிஸார் தன்னை பின்தொடர்ந்து வருகின்றனர் என்பதை தெரியாத நிஷா விக்டர் ஹீரோ போல குஷியாக கொழும்பில் காலடி எடுத்து வைத்து விடுதி ஒன்றில் ரூம் போட்டு தாங்கினார்.நன்றாக ரெஸ்ட் எடுத்த நிஷா விக்டர் கலாதியாக வெளிக்கிட்டு கொழும்புறக்கோட்டைக்கு பெண்களை சைட் அடிப்பதற்காக சென்றுள்ளார்.அதன் போது சிவ பூசையில் கரடி நுழைவது போன்று திடீர் என்று வந்த பொலிஸார் நிஷா விகடரை குண்டுக்கட்டாக அள்ளிக்கொண்டு சென்றனர்.அதன் பின்னர் இவருடன் தொடர்புடைய மற்றைய பொடிப்பயல்கள் மட்டக்குளியில் வைத்து மடக்கி பிடிக்கப்பட்டனர்.

பொலிஸமா அதிபர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ததன் பின்னர் இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருந்தனர் .சின்ன பொடிப்பயல்கள் ரவுடித்தனத்தில் ஈடுப்டுவதை அறிந்துகொண்ட பொலிஸ்மா அதிபர் பொலிசாரை திட்டி தீர்த்திருந்தாராம் .இதன் காரணமாகவே பொலிஸார் இந்த ரவுடி கும்பலை இல்லாதொழிக்க வேண்டும் என்று எடுத்த முடிவு செய்தனர் .எனினும் மீசை முளைக்காத முளைச்சு மூன்றிலை விடாத பொடிப்பயலுகளை அள்ளுவதற்கு பொலிசாருக்கு 1 வருடம் தேவைப்பட்டிருக்கின்றது என்பது கொடுமையிலும் கொடுமை.

தாம் பொலிசாரின் கண்காணிப்பில் இருக்கின்றோம் என்பதை தெரியாமல் கொழும்பிலும் தங்களது ரவுடிசத்தை காட்டி கூத்தடிக்க நினைத்த இந்த சிறுபிள்ளைகளை என்னவென்று சொல்வது?சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பது இது தானோ?

யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் முன்னாள் போராளிகளுக்கு தொடர்புள்ளது என்று சிலர் அடிப்படை ஆதாரமற்ற குற்றசாட்டை முன்வைத்திருந்தனர்.லக்கான் மற்றும் தனு ரொக்ஸ் கும்பல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் போராளிகளுக்கு எந்தவிதமான தொடர்புகளும் இல்லை என்பது தெட்டத்தெளிவாகியுள்ளது.

சுய ஒழுக்கம் , நன்னடத்தை என்பவற்றில் சிறந்து விளங்கிய விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த போராளிகள் ஒருபோதும் இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டார்கள் என்று மக்கள் ஏற்கனவே ஆணித்தரமாக கூறியிருந்தார்கள்.

கையில வாள் கழுத்தில செயின் இருந்தால் தாங்கள் பெரிய ரவுடி, பிஸ்தா என்று நினைத்து யாழ்ப்பாணத்தில் அட்டகாசம் புரிந்த இந்த பொடிப்பயல்கள் போலீசாரிடம் வசமாக மாட்டியது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம் .

Most Popular News :

180 பயணிகளை கடலில் தள்ளிய சோமாலிய கடற்கொள்ளையர் : அதிர்ச்சி சம்பவம்

திருமணத்திற்கு பழைய புடவை அணியவுள்ள சமந்தா : ஏம்மா அம்புட்டு பஞ்சமா?

ஆவா குழு என்ற ஆவாயன் இனியாவது ஓய்வானா? : உண்மையை எடுத்துரைக்கும் உணர்வுத்தமிழன்

Our Other Web Sites :

http://www.tamilnews.com/

http://tamilgossip.com/

http://www.timetamil.com/

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here