கற்பிட்டி கடற்கரையோரத்தில் கரையொதுங்கிய 60 அடி திமிங்கலம்

0
202
60 feet whale docked karpitiya

(60 feet whale docked karpitiya)

கற்பிட்டி கண்டக்குழி கடற் பிரதேசத்தில் சுமார் 60 அடி நீளமுள்ள திமிங்கலமொன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை குறித்த கடற்பிரதேசத்தில் பாரிய திமிங்கலமொன்று மிதந்து வந்துள்ளதை மீனவர்கள் அவதானித்துள்ளனர்.

60 feet whale docked karpitiya

இவ்வாறு கரையொதுங்கிய இந்த திமிங்கலத்தை கரைக்கு எடுத்து வருவதற்கு கற்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லக்‌ஷ்மன் ரன்வல ஆராச்சி தலைமையிலான பொலிஸாரும், கடற்படையினரும், வனஜீவிகள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரும், மீனவர்களும் ௯ட்டாக இணைந்து முயற்சித்தனர்.இது சாத்தியமடையாத நிலையில் திமிங்கிலத்தை கரைக்கெடுக்கும் முயற்சி பின்போடப்பட்டது.

புதன்கிழமை காலை 9 மணி முதல் கரையொதுங்கிய திமிங்கலத்தை வெளியே எடுப்பதற்கு இரண்டு பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் முயற்சிக்கப்பட்டது. எனினும், நேற்று மாலை குறித்த திமிங்கலம் வெளியே எடுக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். எனினும், அதிகமான சுற்றுலா பயணிகள் இந்தப் பகுதியைச் சூழ இருப்பதனாலும், மக்களின் நலன்களை கவனத்திற் கொண்டும் குறித்த திமிங்கலத்தை உடனடியாக கரைக்கு கொண்டு வந்து அதனை புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related news:

பறவைகளின் இருப்பிடம் : சீசன் இல்லாவிடினும் 5000க்கும் மேற்பட்ட பறவைகள் வந்து குவிந்த தமிழக சரணாலயம்

சமூக வலைத்தளத்தில் சுற்றிவரும் சமந்தாவின் முதலிரவு போட்டோ!

பல்கலைக்கழக மாணவர்கள் அறையில் மாணவிகள் உல்லாசம்? 3000 ஆணுறைகள் மீட்பு

பறவைகளின் இருப்பிடம் : சீசன் இல்லாவிடினும் 5000க்கும் மேற்பட்ட பறவைகள் வந்து குவிந்த தமிழக சரணாலயம்

டொனால்ட் டிரம்ப்பின் தீபாவளி கொண்டாட்டம்

பெண்கள் வாழ முடியாத நகரம் எது தெரியுமா?

அண்டார்ட்டிக்காவில் கொத்து கொத்தாய் செத்துவிழும் பென்குவின்கள்!

Our Other Websites :

Keyword:60 feet whale docked karpitiya

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here