விபத்துக்குள்ளான துருக்கி விமானம் அருங்காட்சியகமானது?

0
168
flight musium nepal

(flight musium nepal)

விபத்துக்குள்ளான விமானத்தை விமானி ஒருவர் அருங்காட்சியகமாக மாற்றி பொது மக்களின் பார்வைக்காக வைக்கவுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ‘ஏர்பஸ் ஏ 330’ ரக விமானம் நேபாள தலைநகர் காத்மண்டு விமான நிலையத்தில் தரை இறங்கிய போது ஓடுதளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

flight musium nepal

அதில் பயணம் செய்த 224 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஆனால், விபத்துக்கு உள்ளான அந்த விமானத்தை அங்கிருந்து அகற்ற 4 நாட்கள் சென்றன.

தற்போது அந்த விமானம் காத்மண்டுவில் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

அதற்கான முயற்சியை விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி பெட் அப்ரெடி மேற்கொண்டார்.

63 மீட்டர் நீள விமானத்தை 10 துண்டுகளாக உடைத்து பாரவூர்திகளில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கான பணியில் துருக்கி பொறியியலாளர் குழு ஈடுபட்டது. பின்னர் உடைக்கப்பட்ட துண்டுகளை மீண்டும் ஒட்ட வைத்து ஒன்றிணைக்கப்பட்டது.

அதற்காக 2 மாதம் இரவு பகலாக பணி நடைபெற்றது. அதன்பின்னர் அழகிய அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

தற்போது இதுவே நேபாளத்தின் முதல் விமான அருங்காட்சியகமாக திகழ்கிறது.

(flight musium nepal)

Related news:

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here