முன்னாள் கிரிக்கெட் நடுவர் திருட்டு வழக்கில் சிக்கியுள்ளார்

0
180
supect ampare australia

(supect ampare australia)

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கட் வாரியத்தின் நடுவர் ஒருவர் திருட்டு வழக்கொன்றில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 வயதான கிரிக்கெட் நடுவரான டேரல் ஹேர் 1992 முதல் 2008 வரை 78 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார்.

தனது நடுவர் பதவி காலம் நிறைவடைந்த பின்னர் பின்னர் ஒரு மதுபானக்கடையில் பணியாற்றியுள்ளார்.

அந்த வர்த்தக நிலையில் பணியாற்றிய போது பணத்தை களவாடியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

தான் திருடிய குற்றத்தை டேரல் ஹேர் ஒப்புக் கொண்டார்.

இதன்காரணமாக, அவருக்கு 18 மாத கால நன்னடத்தை
உறுதிமொழி பத்திரம் வழங்கும்படி அவுஸ்திரேலிய நீதிமன்றம்
உத்தரவிட்டது.

இதன்மூலம், அவர் 18 மாதங்கள் எந்த குற்றங்களிலும்
ஈடுபடாமல் நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுதலை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேரல் ஹேர்ரின் சர்வதே போட்டிகளின் பின்னணி :
இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி
1995 ஆம் ஆண்டு நடைபெறும்போது முத்தையா முரளீதரன் பந்து வீச்சை “வீசியெறிவதாக அதாவது த்ரோ” என்று அறிவித்தார்.

அத்துடன், முறையற்ற பந்து அல்லது நோ-பால் என்று
அறிவித்து பெரும் சர்ச்சைக்குள்ளானார்.

அதன்பின் மன்னிப்புக் கடிதம் கொடுத்ததை தொடர்ந்து நடுவராக பணியாற்றினார்.

அதேபோல், 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக கூறி பாகிஸ்தான் அணிக்கு தடைவிதித்தார்.

இதனையடுத்து, அவர் சர்ச்சைக்குரிய நடுவர் என்று வர்ணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(supect ampare australia)

Related news:

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here