ஆனந்தத்தில் திளைக்கும் அம்மாவாகிய அசின்!

0
391
Actress Asin Ragul Couple Welcomed Their First Child Girl

(Actress Asin Ragul Couple Welcomed Their First Child Girl)

இந்திய சினிமாவில் இரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை அசின்.

ஒரு காலத்தில் அசினை போல இருக்கவேண்டும் என பெண்கள் விரும்பிய வரலாறு கூட உண்டு. சினிமா துறையில் மட்டுமன்றி விளம்பர துறையிலும் கொடிகட்டி பறந்தவர் அசின்.

இவர் பிரபலமானது கஜினி திரைப்படத்தின் மூலம் தான்.இவர் சூர்யாவுடன் தமிழில் நடித்த இந்த திரைப்படம் பின்னர் அமீர் கானுடன் ஹிந்தியிலும் வெளியாகியது.

அதனை தொடர்ந்து தமிழில் மட்டுமன்றி ஹிந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிட்டியது. அதன் பின் சில காலம் ஹிந்தி படங்களில் மட்டும் கடும் பிசியாக இருந்தார்.

பின்னர் , ராகுல் சர்மா என்னும் தொழிலதிபரை மணம் முடித்து குடும்ப வாழ்க்கையில் மூழ்கி போன அசின் வாழ்க்கையில் அடுத்த திருப்பமும் ஏற்பட்டு விட்டது.

Actress Asin Ragul Couple Welcomed Their First Child Girl

அசின் – ராகுல் தம்பதிக்கு நேற்று முதலாவது குழந்தையாக அழகிய பெண் வாரிசு பிறந்துள்ளதாம்.

இந்த செய்தியை அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடைசி ஒன்பது மாதங்களும் தனக்கும் கணவர் ராகுலுக்கும் மிகவும் முக்கியமான காலம் என்றும் அவை மிகவும் பரபரப்புடன் கடந்து போனதாகவும் கூறியுள்ளார்.

அசினின் கணவர் தான் மைக்ரோமாக்ஸ் மொபைல் நிறுவனத்தின் இஸ்தாபகர் ஆவார், இவர்கள் இருவருக்கும் இடையில் 2016 ஜனவரி 19 ஆம் திகதி கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.

31 வயதில் அம்மாவாகி இருக்கும் அசினுக்கு சமுக வலைத்தளம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிகிறதாம்.

Related news:

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here