சென்னையில் மாயமான ஜெர்மனியைச் சேர்ந்த நாய் : 100 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டது

0
242
german dog missing chennai

(german dog missing chennai)

ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டீபன் கக்ராஹ், மற்றும் அவரது மனைவி ஸ்டெபன் கஹேராவுடன் கடந்த ஜூலை மாதம் இந்தியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

அவர்களின் வளர்ப்பு நாயான “லூக்’ கையும் இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளனர்.

சென்னை கடற்கரையில் அவர்கள் சென்றுக் கொண்டிருந்த போது செல்லப்பிராணியான “லூக்’ காணாமல் போனது.

இதனையடுத்து, ஜெர்மன் தம்பதியினர் மெரீனா காவல்துறையிடம் முறையிட்டுள்ளனர்.

காவல்துறையினர் நாயை தேடி வந்த நிலையில், கவலையுடன் ஜெர்மன் தம்பதியினர் தங்களது தாய்நாடு புறப்பட்டுச் சென்றனர்.

புறப்படும் முன்னர் நாய் குறித்த விபரங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உதவி கோரியுள்ளனர்.

தங்களது செல்ல நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்தனர்.

வைரலாக பரவிய இந்த செய்தியை அடுத்து பலரும் நாயை தேடி வந்துள்ளனர்.

ஸ்டீபனுக்கு ஆதரவாக சென்னையைச் சேர்ந்த விலங்கின ஆர்வலர்கள், சமூக ஊடகங்கள் மூலமும் துண்டுப் பிரசுரமும் வெளியிட்டனர்.

இந்தநிலையில், லூக் காணாமல் போய் நூறு நாட்கள் கடந்த நிலையில், விலங்கின ஆர்வலர் விஜய நாராயணாவை கடந்த சனிக்கிழமை ஒரு நபர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.

அதில் காணாமல் போன லூக் நாய் தங்களிடம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர்களை பெசன்ட் நகர் வரச் சொன்ன விஜய நாராயனா கொண்டு வந்த நாயை விலங்கின மருத்துவர் உதவியுடன் சோதனை செய்துள்ளார்.

காணாமல் போன லூக்கின் கழுத்தில் அது பற்றிய விவரம் அடங்கிய “சிப்’ ஒன்று பொருத்தப்பட்டிருந்தது.

அதை மருத்துவர் உதவியுடன் சோதித்தபோது அது காணாமல் போன ஜெர்மன் தம்பதியினரின் நாய் லூக்தான் என உறுதியானது.

இதையடுத்து திருவான்மியூர் கால்நடை மருத்துவர்கள் வசம் நாய் ஒப்படைக்கப்பட்டது.

நாய் கிடைத்தது பற்றி காவல்துறையினர் ஜெர்மன் தம்பதிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தற்போது, நேபாளத்தில் இருக்கும் அவர்கள் அடுத்த வாரம் சென்னை வரவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

(german dog missing chennai)

Related news:

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here