நண்பனின் காதலியையும், கள்ளக் காதலனையும் கத்தியை காட்டி மிரட்ட சென்ற சாமியார் கைது

0
391
Man arrested knife

(Man arrested knife)

நண்பனின் காதலி ஒருவரையும் அவரின் கள்ள காதலனையும் அச்சுறுத்துவதற்காக கத்தியை மறைத்து வைத்து கொண்டு வந்த மாந்திரீகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும், சம்பந்தப்பட்ட பெண்ணும் (நண்பனின் காதலி), கள்ளக்காதலனும், விடுவிக்கப்பட்ட விசித்திரமான சம்பவம் ஒன்று தம்புள்ளை காவல்நிலையத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளை காவல்நிலையத்தின் குற்றவிசாரணைப் பிரிவிற்கு அண்மையில் அவசர தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது.

தம்புள்ளை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக ஒருவர் கத்தியுடன் சென்று ஒருவரை தாக்க முற்பட்ட சம்பவம் தொடர்பில் முறையிடப்பட்டது.

இதன்படி, உடன்படியாக செயற்பட்ட காவல்துறையினர் சம்பவம் தொடர்பான அனைவரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது, மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த பெண்ணுக்கு மேலும் 3 ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

எனினும், ஒரு இளைஞர் குறித்த பெண்ணை தம்வசப்படுத்துவதற்காக கெக்கிராவை பகுதியில் உள்ள மாந்திரிக நிலையத்திற்கு சென்று மாந்திரிகர் ஒருவரின் உதவியை நாடியுள்ளார்.

இதன்படி, தனது காதலி பிறிதொரு ஆணுடன் தம்புள்ளை நகருக்கு சென்றுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பெண்ணை எவ்வாறாறேனும் வசிய பலத்துடன் தம்மிடம் சேர்க்குமாறு அந்த இளைஞர் மாந்திரிகரை கோரியுள்ளார்.

அந்த பெண்ணை இளைஞனின் பின்னால் வசியமடைந்து வரவைப்பதாக உறுதியளித்து மாந்திரிகர் குறித்த இளைஞனுடன் தம்புள்ளை நகருக்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில் குறித்த பிறிதொரு ஆணுடன் தம்புள்ளை பேருந்து நிலையத்தில் அலவலாவிக் கொண்டிருந்துள்ளார்.

இந்த விடயம் தெரியவந்த நிலையில் அந்த பெண்ணின் பிறிதொரு காதலனும் இவர்களை பின்தொடர்ந்து அந்த இடத்திற்கு வந்துள்ளமை காவல்துறை விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

பேருந்து தரிப்பிடத்திற்கு சென்ற மாந்திரிகன் பெண்ணுடன் இருந்த இளைஞனை கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்

இந்தநிலையில் உடனடியாக செயற்பட்ட குறித்த இளைஞன் காவல்துறையினருக்கு அவசர அழைப்பை மேற்கொண்டுள்ளார்.

இதனிடையே, மாந்திரிகர் பணத்தை பெற்று வசியம் மேற்கொள்வதாக கூறியதாக பெண்ணின் காதலன் தெரிவித்துள்ளார்.

எனினும்,, அவர் கத்தியை மறைத்து வைத்திருந்தமையை யாரும் அறிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

எனவே, அச்சுறுத்தல் மற்றும் கொலை முயற்சி என்ற குற்றச்சாட்டின் பேரில் மாந்திரிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

(Man arrested knife)

Related news:

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here