குப்பையில் இருந்து காசு சம்பாதிக்கும் பத்து வயது சிறுமி!

0
303
Pakistan Ten Years Old Girl Products Bags Using Garbage

(Pakistan Ten Years Old Girl Products Bags Using Garbage)

இன்றைய நவீன யுகத்தில் குப்பை கூழங்களால் சூழல் மாசடைவது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

உக்கி போகாத குப்பைகள் தொடர்பில் பல அமைப்புகள் தலையை உடைத்து கொள்ளும் இந்த நேரத்தில் ஒரு பாகிஸ்தான் சிறுமிக்கு சூப்பர் ஐடியா ஒன்று தோன்றியுள்ளது.

வெறும் பத்தே வயதான இந்த சிறுமி குப்பை கழிவுகளை பணமாக்கும் வித்தையை அறிந்து வைத்திருக்குறார்.

ஜைமல்

 

ஆம் , பாகிஸ்தானின் பஞ்சாபில் தனது சொந்த ஊரான சர்கோதாவின் புறநகர்ப் பகுதியில் தற்காலிக குப்பைத் தொட்டியைப் பார்த்த 10 வயது ஜைமல் இதற்கு ஒரு வழி காணவேண்டும் என விரும்பினார்.

இந்த குப்பைகளை ஜீ-பேக்ஸ் (Zeebags) என்னும் வண்ண பைகளாக மாற்றியமைக்குறார் இந்த சிறுமி.

பழைய செய்தித்தாள்களை வண்ணங்களை சேர்த்து, அழகான பரிசுப்பைகளாக அலங்கரிக்கும் இந்த பள்ளி மாணவி, அவற்றை குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் விற்பனை செய்கிறார்.

அத்தோடு அவர் நின்று விடவில்லை, விற்பனையில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் பெரும்பகுதியை பல்வேறு உள்ளூர் அறக்கட்டளைக்கு பகிர்ந்தளிக்கிறார்.

ஒரு சில பைகளில் விற்பனையைத் தொடங்கிய மூன்று வருட காலத்தில் அவர் $ 4-5000 மதிப்புள்ள நூற்றுக்கணக்கான பொருட்களை விற்பனை செய்துவிட்டார்.

Pakistan Ten Years Old Girl Products Bags Using Garbage

முதலில் பைகள் செய்வது தொடர்பில் எவ்வித ஐடியாவும் இவருக்கு தோன்றவில்லையாம். உடனே “யூடியூப்” (YouTube)ஐ பார்த்து பைகள் செய்ய கற்றுக்கொண்டாராம் இந்த சிறுமி.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் `எஸ்.ஒ.எஸ் சில்ட்ரன்ஸ் வில்லேஜஸ்` அறக்கட்டளைக்கு ஜைமலின் பணம் செல்கிறது.

ஜைமல்

அவரது புதுமையான தொண்டு நிறுவனம், தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களின் கவனத்தைப் ஈர்த்துள்ளது. மேலும், ஜைமலை, “பாகிஸ்தானின் மிகச்சிறந்த சமூக தொழில் முனைவோர்” என்றும் அவை அழைக்கின்றன.

இவரது பை விற்பனை ஆன்லைன் தளங்களில் சூடு பிடித்துள்ளது. எனது திட்டத்தை பாகிஸ்தானில் மட்டுமல்ல உலகளாவிலும் மேம்படுத்தவேண்டும் என்பதே எனது மிகப்பெரிய இலட்சியம் என கூறியுள்ளார் இந்த சிறுமி.

ஒரு அதிசயம் என்ன தெரியுமா, பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் அமெரிக்காவில் பல விருதுகளை வென்றுள்ளது இவரின் ஜீபேக்ஸ்.

 

Related news:

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here