காமெடியன் விவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சியான்

0
295
vikram meets vivek

(vikram meets vivek)

துருவ நட்சத்திரம் மற்றும் இயக்குனர் ஹரியின் சாமி 2 ஆகிய படங்களில் மிக தீவிரமாக நடித்து வரும் விக்ரம், திடீரென நடிகர் விவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சியான் விக்ரம் நடிப்பில் ‘ஸ்கெட்ச்’ திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இதில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இதன் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது வெளியாக தயாராகி வருகிறது.
இந்த திரைப்படத்தை தவிர கௌவுதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’, ஹரியின் ‘சாமி 2’ ஆகிய படங்களில் விக்ரம் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், அவர் திடீரென விவேக் வீட்டிற்கு சென்றிருந்தார்.

விக்ரம் தன்னுடைய வீட்டிற்கு வந்திருப்பது தனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.

மேலும், விக்ரமுடன் செல்ஃபி எடுத்து அதை விவேக் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

திடீரென கென்னி (விக்ரம்) எனது வீட்டிற்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். சோ மச் ஆஃப் நாஸ்டால்ஜியா எனக் குறிப்பிட்டுள்ளார்.

(vikram meets vivek)

Related news:

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here