அம்பானி குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் : தொழிலையே விட்டு வெளியேறும் தம்பி

0
780
New problem Ambani family

(New problem Ambani family)

கடனில் சிக்கி தவித்து வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் டிடிஎச் சேவை வணிகத்தினை அடுத்து 2ஜி மொபைல் வணிகச் சேவையில் இருந்தும் ஒரு மாதத்தில் வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் லாபம் வரும் வரை 3ஜி மற்றும் சேவையினை மட்டும் தொடர்ந்து அளிக்கும் என்று கூறப்படுகிறது.

New problem Ambani family

ஆர்காம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குர்திப் சிங் ஊழியர்களிடம் நாம் வயர்லெஸ் வணிகத்தின் இறுதிக் கட்டத்தினை அடைந்து விட்டோம், இன்னும் 30 நாட்கள் மட்டுமே இந்தச் சேவையினை ரிலையன்ஸ் அளிக்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

லாபம் வருகின்ற வரை ஆர்காம் நிறுவனம் ஐஎல்டி குரல் சேவை, வாடிக்கையாளர் குரல் அழைப்பு சேவை மற்றும் 4ஜி டாங்கில் போஸ்ட்பெய்டு சேவை மற்றும் மொபைல் டவர் சேவை போன்ற வணிகத்தினைச் செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

New problem Ambani family

இது குறித்த கேள்விக்கான மின்னஞ்சலுக்கு ஆர்காம் நிறுவனம் பதில் ஏதும் அளிக்கவில்லை.

ஏர்செல் நிறுவனத்துடனான இணைவு தோல்வியைச் சந்தித்ததால் 46,000 கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிப்பதை விட வெளியேறுவதே நல்லது என அனில் அம்பானி முடிவு செய்துள்ளார். இதுவே இரண்டு நிறுவனங்களும் இணைந்து இருந்தால் கடனில் இருந்து அளிதாக ஆர்காம் நிறுவனம் மீண்டு இருக்கும்.

New problem Ambani family

அண்மையில்ஆர்காம் நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சி செய்து ஏர்செல் நிறுவனத்துடன் இணைய எடுக்கப்பட்ட முடிவுகள் சட்ட சிக்கலால் முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானியின் ஜியோ சேவை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு ஏர்டெல், வோடாபோன், ஐடியா நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதை விட டாடா மற்றும் ஆர்காம் பாதிப்பு அதிகம் ஆகும்.

ஆர்காம் நிறுவனத்தின் கீழ் 2 சதவீத டிடிஎச் சந்தை மட்டுமே உள்ளது. டிஷ் டிவி நிறுவனத்திடம் 24 சதவீத சந்தையும், டாடா ஸ்கை நிறுவனத்திடம் 23 சதவீதமும் அதிகபட்சமாக உள்ளது.

டிடிஎச் சேவை வழங்குவதில் இருந்து விலகுவதால் தங்களது வாடிக்கையாளர்களைப் பிற சேவை வழங்குனருக்கு மாறக் கோரிக்கை வைத்து வருகிறது ஆர்காம். அதுமட்டும் இல்லாமல் மூன்று முக்கிய டிடிஎச் நிறுவனத்திடம் தங்களது வாடிக்கையாளர்களை மைகிரேட் செய்யவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

ஊழியர்கள்

ஆர்காம் நிறுவனத்திற்குச் சிக்கல் இதோடு முடியவில்லை. வருவாய்ச் சரிந்துகொண்டு வந்ததால் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 800 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது.

சன் டிடிஎச்

2013-ம் ஆண்டுச் சன் டிடிஎச் நிறுவனத்துடன் தனது சேவையினை இணைக்க ஆர்காம் முடிவு செய்தது, ஆனால் மதிப்பீட்டில் இருந்து வித்தியாசத்தால் அது சாத்தியம் இல்லாமல் போனது.

Related news:

ஐரோப்பாவில் மிகப்பெரிய மீன் அருகாட்சியகம் சுவிஸ்லாந்தில் திறப்பு

காமெடியன் விவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சியான்

குப்பையில் இருந்து காசு சம்பாதிக்கும் பத்து வயது சிறுமி

சென்னையில் மாயமான ஜெர்மனியைச் சேர்ந்த நாய் : 100 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டது

நண்பனின் காதலியையும், கள்ளக் காதலனையும் கத்தியை காட்டி மிரட்ட சென்ற சாமியார் கைது

ஆனந்தத்தில் திளைக்கும் அம்மாவாகிய அசின்!

Our Other Websites :

 

Keyword:New problem Ambani family

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here