30 பெண்களுக்கு எய்ட்ஸ் பரப்பிய இளைஞருக்கு 24 ஆண்டு சிறை

0
318
engaged spreading virus

(engaged spreading virus)

உலகில் பல நாடுகளில் அடையாளம் தெரியாத பலர் கணணிகளைப் போன்றே மனிதர்களுக்கும் வைரஸை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், இத்தாலி இளைஞர் ஒருவர் 30 பெண்களுக்கு எய்ட்ஸ் பரப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அவருக்கு 24 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து இத்தாலி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இத்தாலி நாட்டை சேர்ந்தவர் வாலண்டினோ டலுட்டோ (வயது 33). இவருக்கு 14 வயதில் இருந்தே பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

இதன்காரணமாக எய்ட்ஸ் நோய் ஏற்பட்டது. 2006 ஆம் ஆண்டில் அவருக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதிசெய்யப்படுத்தப்பட்டது.

ஆனால், எயட்ஸ் இருப்பதை மறைத்துவிட்டு தொடர்ந்து பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உறவு வைத்திருந்தார்.

சுமார் 53 பெண்களிடம் அவருக்கு தொடர்பு இருந்தமை தெரியவந்துள்ளது.

குறித்த பெண்களில் சிலருக்கு எய்ட்ஸ் நோய் தொற்றியது.

அதன் பிறகுதான் வாலண்டினோ டலுட்டோ மூலம் எய்ட்ஸ் பரவியது தெரியவந்தது.

இவ்வாறு 30 பெண்களுக்கு அவர் மூலம் எய்ட்ஸ் பரவியுள்ளது.

வாலண்டினோ டலுட்டோவுக்கு ஓரின சேர்க்கை பழக்கமும் இருந்தது. இதன் மூலம் 3 ஆண்களுக்கும், ஒரு குழந்தைக்கும் எய்ட்ஸ் பரவியது.

இதுதொடர்பாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் விசாரணை நடந்தது.

அப்போது எய்ட்ஸ் உயிர்கொல்லி நோய் என்று எனக்கு தெரியாது. அதனால் பலருடன் உறவு வைத்துக் கொண்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதை நீதிபதிகள் ஏற்கவில்லை. அதைத்தொடர்ந்து அவருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

(engaged spreading virus)

Related news: 

Our Other Websites :

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here