நடிகை அமலா பால் விரைவில் கைது : என்ன குற்றத்திற்காக என்று தெரியுமா ???

0
198
Arrested amala puol

(Arrested amala puol)

நடிகை அமலா பால் போலி முகவரி கொடுத்து சொகுசு வாகனம் வாங்கியிருப்பதால் வரி ஏய்ப்பு செய்த குற்றத்திற்காக கைது செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழில் சிந்து சமவெளி திரைப்படம் மூலம் அறிமுகமான கேரள நடிகை அமலா பால், அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து வந்தார். அதனால், நடிகர் விஜய்க்கு ஜோடியாகவும் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து.

Arrested amala puol

தொடர்ந்து ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்த அமலா பால், தனியாக ஹீரோயின் முக்கியத்துவம் வாய்ந்த அம்மா கணக்கு படத்தில் அம்மாவாக நடித்து தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் கிளாஸ் ரக மெர்சீடஸ் பென்ஸ் கார் ஒன்றை 1.12 கோடி ரூபாய்க்கு புதுவையில் வாங்கியுள்ளார். அது தான் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Arrested amala puol

புதுவையில் கார் வாங்க வேண்டுமென்றால், அம்மாநில இருப்பிட சான்று பெற்றிருக்க வேண்டும். ஆனால் கேரளாவை சேர்ந்த நடிகை அமலா பால், தமிழகத்தில் நடித்து வசித்து வந்தாலும் புதுவையில் அவர் வசிக்கவில்லை.

அதனால், அவர் போலியான இருப்பிட சான்று கொடுத்து தான் வாங்கியிருப்பார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும், வேறு மாநிலங்களில் வாகனங்களை பதிவு செய்திருந்தால் வசிக்கும் மாநிலத்திற்கு கொண்டு செல்லும் போது வரி செலுத்த வேண்டும்.

ஆனால், அவர் வரி செலுத்தவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அதனால், கேரள அரசு அவர் மீது வழக்கு தொடர்ந்தால் கைது செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், புதுவையில் போலி முகவரி கொடுத்து பலர் வாகனங்கள் வாங்குகிறார்கள். அதனால், சொகுசு காருக்கான வரி 20 சதவீதத்திற்கும் மேல் குறைகிறது.

அதற்காக பல ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அமலா பால் போலியான முகவரி கொடுத்து தான் கார் வாங்கியிருக்கிறார் என்று தெரிந்தாலும், கேரள அரசு நடவடிக்கை எடுக்க முடியாது. புதுவை அரசு தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறுகின்றனர்.

Related news: 

Our Other Websites :

Keyword:Arrested amala puol

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here