டெல்லி கிரிகெட் மைதானத்தின் நுழைவாயிளுக்கு வீரேந்திர சேவாக் பெயர் சூட்டப்பட்டுள்ளது .

0
259
Virender Sehwag Stadium,Virender Sehwag name ,Delhi Cricket Association ,Delhi Feroz Shah Kotla Stadium ,great honor virender sehwag

(Virender Sehwag Stadium)

டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் நுழைவாயில் ஒன்றிற்கு வீரேந்திர சேவாக் பெயர் சூட்டப்பட்டுள்ளது

Virender Sehwag Stadium,Virender Sehwag name ,Delhi Cricket Association ,Delhi Feroz Shah Kotla Stadium ,great honor virender sehwag

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராக திகழ்ந்தவர் வீரேந்திர சேவாக். டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை முச்சதமும், ஒருநாள் போட்டியில் இரட்டை சதமும் அடித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த இவரை கவுரவிக்கும் விதமாக டெல்லி கிரிக்கெட் சங்கம், டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்திலன் 2-வது நுழைவாயிலுக்கு அவரது பெயரை சூட்ட முடிவு செய்தது.

அதன்படி இன்று 2-வத நுழைவாயிலுக்கு ‘வீரேந்திர சேவாக்’ என்று இன்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய விழாவில் சேவாக், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, நெஹ்ரா, தினேஷ் கார்த்திக் உள்ள இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர்.

நுழைவாயிலுக்கு தனது பெயர் சூட்டியது குறித்து சேவாக் கூறுகையில் ‘‘இது ஒரு சிறந்த கவுரவம். கிரிக்கெட் விளையாடிய காலத்திற்குப் பிறகு வீரருக்குப் தற்போது மைதான கேட்டிற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

great honor virender sehwag

ஆனால், டிரெஸ்ஸிங் ரூம், மைதான கேலரி போன்றவற்றிலும் பெயர் இடம் பெற முடியும். டெல்லியில் கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து நேர்மறையான முன்னேற்றம் வந்துள்ளது. இது சிறப்பாக விஷயம்.

எந்தவொரு நிகழ்ச்சி நடந்தாலும், டெல்லி மற்றும் இந்திய அணிக்காக விளையாடிய அனைவரையும் அழைக்க வேண்டும். என்னுடைய பெயரை படிக்கும் எந்தவொரு இளம் கிரிக்கெட் வீரருக்கும் உத்வேகம் கிடைக்கும். வீரேந்திர சேவாக் குழந்தையாக இருக்கும்போது இங்கே விளையாடியுள்ளார். அவர் இங்கிருந்து செல்லும்போது அவரது பெயர் நுழைவாயிலுக்கு சூட்டப்பட்டுள்ளது.

ஆகவே. நாமும் டெல்லி அணிக்காக விளையாடி, அதன்பின் இந்தியா அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடினால், கேலரி போன்ற இடத்தில் நம் பெயர்கள் இடம்பெறும் என்ற உத்வேகம் ஏற்படும்’’ என்றார்.

நெஹ்ரா நாளை விடைபெறுகிறார் என்று கேட்டபோது, நாம் நாளை அதை பற்றி பேசுவோம். இன்று என்னுடைய நாள் என்று ஜோக்காக கூறினார்.

Related news: 

Our Other Websites :

Keyword :Virender Sehwag Stadium

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here