96 வயது தாயை வீட்டில் வைத்து பூட்டி விட்டு சுற்றுலா சென்ற மகன் : ஆபத்தான நிலையில் தாய்

0
273
96 age old mother ,police information ,Travel Andaman,Ruthless man,Kolkata West Bengal

(96 age old mother)

என்ன தான் இருந்தாலும் தொப்புள் கொடி உறவை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது .அம்மா என்றாலே பிள்ளைக்கு ஒரு தனி பாசம் இருக்கும் .ஆனால் இங்கு ஒரு மிருகத்திற்கு அது கூட இல்லை .பெற்ற மனம் பித்து பிள்ளை மனம்  கல்லு  என்பதற்கு சரியான உதாரணம் தான் இந்த நிகழ்வு .

96 age old mother ,police information ,Travel Andaman,Ruthless man,Kolkata West Bengal

96 வயது தாயை வீட்டுக்குள் இருக்கும் ஒரு அறையில் பூட்டி விட்டு  சுற்றுலா சென்ற மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் தான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. 96 வயதான சபிதா நாத் என்ற மூதாட்டி தனது மகன் விகாஷ் என்பவருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சபிதா உறங்கிக் கொண்டிருக்கும் போது அவரது அறையை பூட்டிவிட்டு விகாஷ் அந்தமானுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

சபிதா உணவில்லாமல் பூட்டிய அறைக்குள் இருந்துள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை சபிதாவின் மகள், தாயைக் காண வீட்டுக்கு வந்த போது வீடு வெளியே பூட்டியிருந்த நிலையில் உள்ளிருந்து சத்தம் வந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.

Related news: 

Our Other Websites :

Keyword:96 age old mother

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here