கமல் உண்மையில் ஒரு இலுமினாட்டியா?

0
313
Actor Kamal Tweet Become True Regarding Rain Flood

(Actor Kamal Tweet Become True Regarding Rain Flood)

நடிகர் கமல் பல விடயங்களை எதேச்சையாகவோ அல்லது தெரிந்தோ கூறினால் அது சில நாட்களில் நடந்துவிடுவது பற்றி அறிந்திருப்பீர்கள்.

இதனால் கமலை இலுமினாட்டி என்று கூட குறும்பாக அழைப்பது கூட உண்டு. தற்போதும் இது போன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

Actor Kamal Tweet Become True Regarding Rain Flood

நடிகர் கமல் அரசியலில் குதித்த பின்னர் , இந்தியாவில் தமிழகம், எண்ணூர் கொசஸ்தலை ஆற்று முகத்துவார பகுதி, அனல் மின் நிலையச் சாம்பல் கொட்டப்பட்டுள்ள இடம் உள்ளிட்ட பகுதிகளை சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன் பின்னர் , வடசென்னை பகுதியில் உள்ள வல்லூர் அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கொட்டுவதால் கன மழை பெய்தால் நீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கும் என்றும் வடசென்னைக்கு ஆபத்து என்றும் நடிகர் கமல் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருந்தார்.

kamala

சமீபத்தில் வடசென்னை வியாசர்பாடியில் கனமழை பெய்ததால், ஜீவா சுரங்க பாதையில் மூட்டளவுக்கு சாக்கடை நீர் தேங்கியுள்ளது. வியாசர்பாடி வழியாகச் சென்ற பேருந்து மழை நீரில் சிக்கி பழுதாகி நின்று விட்டது.

மேலும் வெள்ளநீரில் சென்ற இரு சக்கர வாகனங்கள் பழுதாகி ஆங்காங்கே நின்று விட்டது. நீர்த் தேக்கம் சற்றும் குறையாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

மின்சாரமும் இல்லாததால் மோட்டார் வைத்து அந்த தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் நீரை வெளியேற்ற வழி தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த அனர்த்தத்தை முதலே தெளிவாக கூறிய கமலுக்கு சமுக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிகிறதாம்.

Related news: 

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here