பிகினி உடையில் சாதனை படைத்த முஸ்லிம் பெண்!

0
353
Iran Body Building Women Rocking Bikini Competition

(Iran Body Building Women Rocking Bikini Competition)

முஸ்லீம் பெண்கள் அணியும் உடைகள் பற்றிய விவாதம் இன்னமும் உலக அரங்கில் கடும் சிக்கலாகவே உள்ளது. அவர்களின் உடைகள் பற்றிய தடைகள் ஏராளம்.

அதிலும் பிகினி போன்ற உடைகளை அவர்கள் நினைத்தும் பார்க்க முடியாது. ஆனால் ஒரு முஸ்லீம் பெண் பிகினி உடை போட்டியில் சாதித்துள்ளார் என்றால் நம்பமுடிகிறதா?

ஆம்! ஈரானை சேர்ந்த பெண் ஒருவர் பிகினி உடைகள் பற்றிய தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து பிகினி போட்டியில் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளார்.

ஈரானை சேர்ந்த 37 வயதான ஹோடா ஜர்ரா ஓர் உடல் கட்டமைப்பாளர். சாதாரண மதப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர், குடும்ப எதிர்ப்புகளையும் தாண்டி உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றார்.

அவரது ஏழு வயதில் அர்னால்ட் படம் பார்த்த போது இந்த உடல் கட்டமைப்பு தொடர்பில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டதாம்.

தனது கனவுகளுக்காக, ஈரானை விட்டுச் சென்ற இவர் தற்போது அமெரிக்காவில் குடியேறியுள்ளார்.

இவர் 2015 ஆம் ஆண்டு உடல் கட்டமைப்பு போட்டியில் முதன் முதலாக கலந்துகொண்டாராம். போட்டிக்கு முதல் ஒன்பது வாரங்களே இருந்த நிலையில் யு டியுப் பார்த்து பயிற்சிகளை செய்துகொண்டார். அதே ஆண்டு, பிகினி போட்டியில் முதல் பரிசை வென்றார்.

Iran Body Building Women Rocking Bikini Competition

இது தொடர்பில் ஹோடா என்ன கூறுகிறார் தெரியுமா?

இந்த விளையாட்டை மறந்துவிடும்படி பலரும் அழுத்தம் கொடுத்தனர். இதனால் பெண் உறுப்பு சிதைந்துவிடும் என்றெல்லாம் என்னை எச்சரித்தனர். இதனால் எனக்கு குழந்தை பிறக்காது , கணவர் விவாகரத்து செய்துவிடுவார் என்று என் அப்பா கூறினார். முதலில் எனக்கு அவமரியாதையே கிடைத்தது. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது.

யாராக இருந்தாலும் சரியாக திட்டமிடுங்கள் , எதிர்ப்புகளை சந்தித்தாலும் இலக்குகளை மாற்றாதீர்கள் என்று கூறுகிறார் இந்த ஈரானின் இரும்பு பெண்மணி.

 

Related news: 

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here