கட்டாய திருமணம் செய்து வைத்தவர்களுக்கு மணப்பெண் கொடுத்த பரிசு!

0
301
Pakistan Woman Killed Husband Relatives With Poisoned Lassi

(Pakistan Woman Killed Husband Relatives With Poisoned Lassi)

பெண்களுக்கு அவர்களின் திருமண வாழ்க்கையை நிச்சயம் செய்துகொள்ளும் உரிமை பல இடங்களில் மறுக்கப்படுகிறது.

அவர்களின் விருப்பம் இல்லாமலே பல இடங்களில் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

பாகிஸ்தான் நாட்டில் பெண் ஒருவருக்கு அவரின் விருப்பம் இல்லாமல் , நபர் ஒருவரை கட்டாய கல்யாணம் செய்துவைத்த விளைவு பலரை அநியாயமாக கொலை செய்ய வைத்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசியா பிபி என்ற பெண்ணிற்கு கடந்த செப்டம்பர் மாதம் அவளது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.

அசியா ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அசியா தனது காதலன் மற்றும் அவனின் உறவுக்காரப் பெண்ணுடன் இணைந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

கணவருக்கு கொடுக்க இருந்த பாலில் விஷம் கலந்தார். ஆனால் அதை அவர் குடிக்கவில்லை. தவறுதலாக அந்த பாலை லசி எனப்படும் பானத்தில் கலந்து விட்டனர். அதனை வீட்டிலிருந்த அனைவரும் பருகினர்.

Pakistan Woman Killed Husband Relatives With Poisoned Lassi

லசியை பருகியதால் கணவர் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து அசியா அவரது காதலன் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த காதலனின் உறவுக்காரப் பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணின் விருப்பம் இல்லாமல் திருமணம் முடித்து வைத்த பாவம் பலரை பலியெடுத்து விட்டதே என்று பலரும் இதை பற்றி வருத்தம் தெரிவித்து வருகின்றனராம்.

Related news: 

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here