பிறந்தநாள் கொண்டாடினால் தலையை எடுப்பார்களா? இதென்ன கொடுமை!

0
337
Saudi Arabia Government Decided Beheaded Six School Girls

(Saudi Arabia Government Decided Beheaded Six School Girls)

சவூதி அரேபியா இஸ்லாமிய சட்டங்களை மிகக்கடுமையாக பின்பற்றிவருகின்ற ஒரு நாடு.

அங்கு பல குற்றங்களுக்கு தலையை துண்டித்து தண்டனை வழங்கப்படுவது வழமையானது.

ஆனால் பிறந்த நாள் கொண்டாடினால் கூட அது தலையை துண்டிக்கும் அளவுக்கு பாரிய குற்றமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய 6 பள்ளி மாணவிகளின் தலையை வெட்ட சவூதி அரசு உத்தரவிட்டுள்ளதாம்.

சவுதியில் பாத்திமா அல் குவைனி என்னும் பெண் தனது பிறந்தநாளை அவரது தோழிகள் மற்றும் மூன்று ஆண் நண்பர்களுடன் இனைந்து பாத்திமாவின் வீட்டில் கொண்டாடி உள்ளனர். இது குறித்து பாத்திமாவின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சவுதி அரேபியாவின் காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

காவலர்கள் அங்கு வந்த போது தங்களது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து இவர்கள் நடனமாடிக் கொண்டிருந்துள்ளனர்.

உடனடியாக அனைவரையும் கைது செய்த காவல் துறை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.

ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணையில் பெண்கள் தங்களது தவறை ஒப்புக்கொள்ளாததால் மரண தண்டனையை நிறைவேற்றுமாறு சவூதி அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

Saudi Arabia Government Decided Beheaded Six School Girls

மிக மோசமான மனித உரிமை மீறலான இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபையும், பெண்கள் உரிமை ஆணைக்குழுவும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஆனால் அவர்களுடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடிய ஆண் நண்பர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா? கைது செய்யப்பட்ட மூன்று ஆண் நண்பர்களுக்கும் எச்சரிக்கை மற்றும் ஆலோசனைகள் வழங்கி விடுதலை செய்துள்ளது ஷரியா தீர்ப்பு குழு.

சவுதியில் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம உரிமைகளும், சுதந்திரமும் வழங்கப்படுவது இல்லை. எனினும் இது மிக மோசமான பாகுபாடு மற்றும் தண்டனை என்று உலக நாடுகள் முழுவதும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

Related news: 

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here