ஆசிட் வீச்சில் சிதைந்த பெண்ணின் முகம் : சிகிச்சையின் பின் அழகு தேவதையாக மாறிய அதிசயம்

0
380
Woman suffered acid,affected acid,British East London,Medical treatment,Police arrested

(Woman suffered acid)

கடந்த யூன் மாதம் நடந்த ஆசிட் வீச்சில் இளம் பெண் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சைக்கு பிறகு அழகு தேவதையாக மீண்டும் மாறியிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் கிழக்கு லண்டனை சேர்ந்தவர் ரேஷம் கான் (21), இவர் தனது உறவினர் ஜமீல் முக்தருடன் கடந்த யூன் மாதம் பிறந்தநாள் கொண்டாடிய போது மர்ம நபர் ஒருவர் இருவர் முகத்திலும் ஆசிட் வீசினார்.

இதில் ரேஷம் கானின் முகம் கடுமையாக பாதிக்கப்பட்டு தீவிர மருத்துவ சிகிச்சை மேற்க்கொண்டு வந்தார்.

சம்பவம் தொடர்பாக ஜான் டொம்லின் என்பவரை பொலிசார் கைது செய்தனர்.

ஆசிட் வீச்சுக்கு பின்னர் தான் அனுபவிக்கும் வலிகள் மற்றும் வேதனை குறித்து ரேஷம் சில மாதங்களுக்கு முன்னர் விவரித்திருந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரேஷமின் புகைப்படங்கள் வெளிவந்ததே தவிர அதன் பிறகான புகைப்படங்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து மீண்டும் அழகு பதுமையாக காட்சியளிக்கும் தனது புகைப்படங்களை ரேஷமின் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து அவரின் போராட்ட குணம் மற்றும் தன்னம்பிக்கையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Related news: 

Our Other Websites :

keyword :Woman suffered acid

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here