காதல் தோல்வியின் பின் காதல் சின்னங்களை விற்பனை செய்யும் சந்தை

0
382
Old Flames Market,

(Old Flames Market)

காதல் சுகமானது என சொல்லி திரிந்து அவர்கள் கொடுத்த காதல் பரிசுகளை வைத்து காலம் காலமாக கனவு காண்பதெல்லாம் அந்த காலம் .இப்ப எல்லாம் கொடுத்த காதல் பரிசுகளை விற்று பணம் சம்பாதிக்கும் காலம் .ஆமாம்

Old Flames Market,

வியட்நாமில் உள்ள ‘ஓல்ட் ஃப்ளேம்ஸ்’ சந்தையில் காதலில் தோல்வியடைந்தவர்கள், தங்களின் காதல் பரிசுகளை விற்பனை செய்துவிடுகிறார்கள்! காதல் கடிதங்கள், வாழ்த்து அட்டைகள், கிடார், துணிகள், வாசனைத் திரவியம், மெழுகுவர்த்தி, பணப்பை, புத்தகங்கள் என்று ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன. இன்றைய இளைஞர்களும் இளம் பெண்களும் தோல்வியடைந்த காதலின் வலியைச் சுமந்துகொண்டு இருக்க விரும்புவதில்லை.

வலியிலிருந்து விரைவில் விடுபடவே விரும்புகிறார்கள். அதனால் உண்மையை ஏற்றுக்கொண்டு, தங்களிடமிருக்கும் பரிசுப் பொருட்களைக் கொண்டுவந்து விற்றுவிடுகிறார்கள். இதன்மூலம் அவர்கள் அந்தத் துன்பத்திலிருந்து வெளிவந்துவிடுகிறார்கள். “என் காதல் உடைந்தபோது நான் மிகவும் வருத்தப்பட்டேன். என்னால் சாப்பிடவோ, எதுவும் குடிக்கவோ முடியவில்லை. சில நாட்களுக்குப் பிறகு துன்பத்திலிருந்து வெளிவர முடிவெடுத்தேன். துணிகள், பணப்பைகள், பற்பசை என்று அனைத்தையும் விற்றுவிட்டேன். இப்போது பாரம் குறைந்துவிட்டது” என்கிறார் 29 வயது பு தை.

பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சந்தை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டிருக்கிறது. “போன தலைமுறை வரை பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணங்கள்தான் அதிகம். இன்றைய இளைஞர்கள் 30 வயது வரை சுதந்திரமாக இருந்துவிட்டு, பிறகே காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். காதல் தோல்வியடைந்தாலும் அதிலிருந்து விரைவில் மீண்டுவிட நினைக்கிறார்கள். ” என்கிறார் இந்தச் சந்தையை ஆரம்பித்த டின் தாங்

Related news: 

ஆசிட் வீச்சில் சிதைந்த பெண்ணின் முகம் : சிகிச்சையின் பின் அழகு தேவதையாக மாறிய அதிசயம்

பிறந்தநாள் கொண்டாடினால் தலையை எடுப்பார்களா? இதென்ன கொடுமை

கமல் உண்மையில் ஒரு இலுமினாட்டியா?

டெல்லி கிரிகெட் மைதானத்தின் நுழைவாயிளுக்கு வீரேந்திர சேவாக் பெயர் சூட்டப்பட்டுள்ளது

பிகினி உடையில் சாதனை படைத்த முஸ்லிம் பெண்!

96 வயது தாயை வீட்டில் வைத்து பூட்டி விட்டு சுற்றுலா சென்ற மகன் : ஆபத்தான நிலையில் தாய்

கட்டாய திருமணம் செய்து வைத்தவர்களுக்கு மணப்பெண் கொடுத்த பரிசு

ஆஸ்திரேலியாவில் ஒரே நாளில் 1,76,000 மின்னல்கள் தோன்றிய அதிசயம்

பில்கேட்சை பின்னுக்கு தள்ளி உலக பணக்காரர்களில் முதலிடம் பிடித்த amazon CEO

Our Other Websites :

Keyword:Old Flames Market

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here