போர் அடித்ததால் விஷ ஊசி போட்டு 106 நோயாளிகளை கொன்ற கொடூர தாதி

0
208
Nurse kills 106 patients,Put poisoned injections,Brutal acts,Germany Nurse ,

(Nurse kills 106 patients)

மருத்துவ தொழில் என்பது மிகவும் புனிதமான தொழில் .பல உயிர்களை காப்பாற்றும் மருத்துவ தொழிற்கு அவதுறு இளைக்கும் முகமாக இந்த பெண் தாதி செய்த இழிவு செயல் கேவலமானதொன்றாக   இருந்தது .

ஜெர்மனியில் நர்ஸ் ஒருவர் போர் அடித்ததால் விஷ ஊசி போட்டு 106 நோயாளிகளை கொலை செய்துள்ளார். ஜெர்மனியை சேர்ந்தவர் நீல்ஸ் ஹோகல்(41). அவர் 1999ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை இரண்டு மருத்துவமனைகளில் நர்ஸாக இருந்துள்ளார். ப்ரிமென் நகரில் இருக்கும் டெல்மென்ஹோர்ஸ்ட் மருத்துவமனையின் ஐசியு பிரிவில் இருந்த 2 நோயாளிகளை நீல்ஸ் கொன்றது, 4 பேரை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டு 2015ம் ஆண்டில் நிரூபிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்க விசாரிக்க ஏகப்பட்ட தகவல்கள் வெளி வருகின்றன. நீல்ஸ் 106 நோயாளிகளை விஷ ஊசி போட்டு கொலை செய்தது தெரிய வந்துள்ளது. அவர் மேலும் பல நோயாளிகளை கொலை செய்திருக்கக்கூடும் என்று போலீசார் அஞ்சுகிறார்கள். இது குறித்து நீல்ஸ் விசாரணையில் கூறியிருப்பதாவது, இதய செயல் இழப்பு அல்லது மொத்தமாக உடல் செயல் இழப்பை ஏற்படுத்தக் கூடிய மருந்தை ஊசி மூலம் நோயாளிகளுக்கு ஏற்றினேன். அவர்களை காப்பாற்றவும் முயன்றேன். காப்பாற்றினால் பிற நர்ஸுகளை விட நான் திறமையானவன் என்ற பெயர் கிடைக்கும் என்று செய்தேன்.

போர் அடித்ததால் நோயாளிகளுக்கு விஷ ஊசிபோட்டேன். அவர்களும் இறந்துவிட்டார்கள் என்றார். 2005ம் ஆண்டு நோயாளி ஒருவருக்கு நீல்ஸ் விஷ ஊசி போட முயன்றதை பார்த்த பெண் நர்ஸ் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அதன் பிறகே நீல்ஸின் கொடூர செயல்கள் பற்றி தெரிய வந்தது.

Related news: 

கிறிஸ்மஸ் தினத்தையொட்டி இலங்கையில் பிரமாண்ட 110 கிலோ கேக் தயாரிப்பு

சீனா டாக்டர் தேர்வில் அதிக புள்ளிகளை பெற்று சாதனை படைத்த ரோபோ

ஜூலிக்கு காதல் வந்து விட்டது : காதலன் யார் தெரியுமா

62000 ரூபா வரை சில்லறை காசு சேகரித்து அக்காவிற்கு ஸ்கூட்டர் வாங்கி கொடுத்த தம்பி

தனது உடற்தகுதி பற்றி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த டோனி

சைக்கிளில் பாராளுமன்றம் வந்த மஹிந்த ராஜ பக்ச

காதல் தோல்வியின் பின் காதல் சின்னங்களை விற்பனை செய்யும் சந்தை

நடிகை கஸ்தூரியின் ஆசையை பாருங்க!

இந்த அசாத்திய மனிதரின் திறமை வியக்க வைக்கின்றது : ஆணியில் ஓவியம் வரையும் திறமை

Our Other Websites :

Keyword:Nurse kills 106 patients

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here