சீனியர் புஷ் மீது இளம்பெண் செக்ஸ் புகார்

0
226
Woman accuses George H W Bush

(Woman accuses George H W Bush)

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ. மீது 6-வதாக இளம்பெண் ஒருவர் செக்ஸ் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் என அழைக்கப்படுகிறார். இவர் சீனியர் புஷ். இவரது மகன் ஜார்ஜ் புஷ்சும் அதிபராக பதவி வகித்தவர்.

சீனியர் புஷ்சுக்கு தற்போது 79 வயது ஆகிறது. அவரால் நடக்க முடியவில்லை. சக்கர நாற்காலியில் அமர்ந்து தனது வாழ்நாளை கழித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் மீது 5 பெண்கள் ‘செக்ஸ்’ புகார் கூறினர். இவர் அதிபராக பதவி வகித்த போதும், ‘சி.ஐ.ஏ’ உளவு நிறுவன டைரக்டராக இருந்தபோதும் தங்களிடம் ‘செக்ஸ்’ சில்மி‌ஷம் செய்ததாக குற்றம் சாட்டினர்.

இதை சீனியர் புஷ் தனது செய்தி தொடர்பாளர் மூலம் மறுத்துவிட்டார். இந்த நிலையில் தற்போது அவர்மீது 6-வது பெண் ‘செக்ஸ்’ குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

அவரது பெயர் ரோஸ்லின் காரிகன். இவர் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது 2003-ம் ஆண்டில், எனது 16-வது வயதில் டெக்சாசில் சி.ஐ.ஏ. உளவு பிரிவு அதிகாரிகளுடன் இருந்த சீனியர் புஷ்சை சந்தித்தேன். அங்கு எனது தந்தையும் பணிபுரிந்தார்.

எனது தாயுடன் சென்ற நான் அவர் முன்னாள் அதிபர் என்ற முறையில் அவருடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டேன். அப்போது அவர் எனது உடலின் பின்புறத்தில் கையால் தடவி சிலிமி‌ஷத்தில் ஈடுபட்டார் என்றார்.

இக்குற்றச்சாட்டுக்கும் சீனியர் புஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது செய்தி தொடர்பாளர் ஜிம் மெக்ராத் கூறும் போது, ‘‘அமெரிக்காவின் 41-வது அதிபராக இருந்த சீனியர் புஷ் சி.ஐ.ஏ. உளவு நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிந்தார்.

அவர் ஒருபோதும் இதுபோன்ற கீழ்தரமான தவறுகளை மனது அறிந்து செய்திருக்க மாட்டார். போட்டோ எடுத்தபோது ஒருவேளை தெரியாமல் இதுபோன்ற நடந்து இருந்தால் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார் என்றார் .

Related news: 

கிறிஸ்மஸ் தினத்தையொட்டி இலங்கையில் பிரமாண்ட 110 கிலோ கேக் தயாரிப்பு

சீனா டாக்டர் தேர்வில் அதிக புள்ளிகளை பெற்று சாதனை படைத்த ரோபோ

ஜூலிக்கு காதல் வந்து விட்டது : காதலன் யார் தெரியுமா

62000 ரூபா வரை சில்லறை காசு சேகரித்து அக்காவிற்கு ஸ்கூட்டர் வாங்கி கொடுத்த தம்பி

தனது உடற்தகுதி பற்றி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த டோனி

சைக்கிளில் பாராளுமன்றம் வந்த மஹிந்த ராஜ பக்ச

காதல் தோல்வியின் பின் காதல் சின்னங்களை விற்பனை செய்யும் சந்தை

நடிகை கஸ்தூரியின் ஆசையை பாருங்க!

இந்த அசாத்திய மனிதரின் திறமை வியக்க வைக்கின்றது : ஆணியில் ஓவியம் வரையும் திறமை

Our Other Websites :

Keyword:Woman accuses George H W Bush

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here