குழந்தை சகிதம் இன்று காதலரை கைபிடிக்கும் செரீனா வில்லியம்ஸ்

0
801
Serena Williams wedding

(Serena Williams wedding)

டென்னிஸ் உலகின் முடிசூடா மகாராணி செரீனா வில்லியம்ஸ்  ரெட்டிட் துணை நிறுவனர் அலெக்சிஸ் ஓகானியான் திருமணம் இன்று நடைபெற உள்ளது. மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

Serena Williams wedding

அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ், 1995ல் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் விளையாடத் துவங்கினார். கடந்த, 2002ல் உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். 17 ஆண்டுகளில், 8 முறை தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்திருந்தார்.
தற்போது, 36 வயதாகும் செரீனா, இதுவரை, 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதிக பட்டம் வென்றவர்களில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

Serena Williams wedding

2016ல் நிச்சயமான திருமணம் ரெட்டிட் நிறுவனத்தின் துணை நிறுவனர் அலெக்சிஸ் ஓகானியானும், செரீனாவும் காதலித்து வந்தனர். 2016 டிசம்பரில் திருமணம் செய்வதாக நிச்சயம் செய்து கொண்டனர்

திருமணத்திற்கு முன்பே தாய்மை இந்தாண்டு ஜனவரியில், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்போது, தான் கர்ப்பமாக இருப்பதாக செரீனா அறிவித்தார். ஆஸ்திரேலிய ஓபனை வென்ற பிறகு, சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்தார் செரீனா. செப்டம்பர், 1ம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஒலிம்பியா என்று பெயர் சூட்டப்பட்டது.

Serena Williams wedding

2018 ஜனவரியில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் மீண்டும் களமிறங்கப் போவதாககுழந்தை சகிதம் இன்று காதலரை கைபிடிக்கும் செரீனா வில்லியம்ஸ் செரீனா அறிவித்திருந்தார். இந்த நிலையில், செரீனா – அலெக்சிஸ் ஓகியான் திருமணம், நியூ ஓர்லான்சில் நாளை நடக்க உள்ளது.

மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாடகி பியான்ஸ், நடிகை மேகன் மார்கெல் உள்பட செரீனாவுக்கு நெருக்கமானவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தையுடன் திருமணம் செய்வது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என, செரீனா முன்பு கூறியிருந்தார்.

Related news: 

கிறிஸ்மஸ் தினத்தையொட்டி இலங்கையில் பிரமாண்ட 110 கிலோ கேக் தயாரிப்பு

சீனா டாக்டர் தேர்வில் அதிக புள்ளிகளை பெற்று சாதனை படைத்த ரோபோ

ஜூலிக்கு காதல் வந்து விட்டது : காதலன் யார் தெரியுமா

62000 ரூபா வரை சில்லறை காசு சேகரித்து அக்காவிற்கு ஸ்கூட்டர் வாங்கி கொடுத்த தம்பி

தனது உடற்தகுதி பற்றி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த டோனி

சைக்கிளில் பாராளுமன்றம் வந்த மஹிந்த ராஜ பக்ச

காதல் தோல்வியின் பின் காதல் சின்னங்களை விற்பனை செய்யும் சந்தை

நடிகை கஸ்தூரியின் ஆசையை பாருங்க!

இந்த அசாத்திய மனிதரின் திறமை வியக்க வைக்கின்றது : ஆணியில் ஓவியம் வரையும் திறமை

Our Other Websites :

Keyword:Serena Williams wedding

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here