மீண்டும் 2018 இல் ரஜனி அரசியல் பிரவேசமாம்!

0
155
Indian Actor Rajinikanth Enters Politics Next Year January

(Indian Actor Rajinikanth Enters Politics Next Year January)

நடிகர் ரஜனிகாந்த் அரசியலில் குதிப்பது தொடர்பில் காலத்துக்கு காலம் பரபரப்பு ஏற்படுவது வழமை. தற்போது மீண்டும் அது தொடர்பான பேச்சுகள் எழுந்துள்ளது.

ரசிகர்களுடனான சந்திப்பில் ரஜனியிடம் அரசியல் பிரவேசம் பற்றி கேட்கப்பட்டபோது நேரம் வரும்போது பார்த்துக்கொள்வோம் அதுவரை பொறுமை காப்போம் என்றார்.

ரஜனியின் இந்த பேச்சு பலராலும் பரபரப்பாக பேசப்பட்டது.

இது இப்படி இருக்க ரஜனி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் மகன் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக தர்மபுரிக்கு ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணராவ் சென்றிருந்தார்.

அங்கு, ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரின் அன்புக்கும் உரியவர் ரஜினிகாந்த். அவர் அரசியலுக்கு வந்தால் நல்லதே செய்வார். மக்கள் அவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். வரும் ஜனவரி மாதம் ரஜினிகாந்தின் அரசியல் கட்சி அறிவிப்பு வெளிவரும் என்றார்.

Indian Actor Rajinikanth Enters Politics Next Year January

சமீபத்தில் அரசியலுக்கு வரவேண்டிய அவசரம் தற்போது இல்லை என்று ரஜனி கூறியிருந்தார்.

இந்நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் கட்சி அறிவிப்பு ஜனவரியில் வரும் என்று அவரது சகோதரர் சத்திய நாராயணன்ராவ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

Related news :

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here