சீனாவில் 59 ஆண்டுகளாக எரியும் நெருப்புகுழிகள்!

0
118
China Amazing Fire Pits Burning 59 Years Continuously

(China Amazing Fire Pits Burning 59 Years Continuously)

சீனாவில் உள்ள Chongqing என்ற பகுதியில் 59 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக்கொண்டிருக்கும் நெருப்பு குழிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இதனால் ஆபத்துகள் காத்துக்கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Chongqing பகுதியில் கடந்த 1958 ஆம் ஆண்டு எண்ணெய் எடுப்பதற்காக கிணறு தோண்டப்பட்டுள்ளது.

ஆனால், அங்கு எதிர்ப்பார்த்த அளவு எண்ணெய் வளம் இல்லாத காரணத்தால் அதனை சரியாக மூடாமல் அப்படியே விட்டுசென்றுள்ளனர்.

இதனால், அப்போது எரியத்துவங்கிய நெருப்பு இன்று வரை அணையாமல் 59 ஆண்டுகளாக எரிந்துக்கொண்டிருக்கிறது.

பசுமையான வயல்வெளிக்கு இடையில் உள்ள வறண்ட பகுதியில் இந்த நெருப்பு குழிகள் உள்ளன.

சுமார் 7 அல்லது 8 நெருப்பு குழிகள் இங்கு உள்ளன. அந்த பகுதியில் வாழும் மக்கள் இந்த நெருப்பு குழிகளை தண்ணீர் சுட வைக்கவும் , சில சமயங்களில் சமையலுக்கும் பயன்படுத்துகின்றனர்.

China Amazing Fire Pits Burning 59 Years Continuously

ஆனால், இதற்கு பின்னால் பெரும் ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது என ஆராய்ச்சியாளர் எச்சரிக்கின்றனர்.

இந்த குழிகள் எரிவதற்கான முக்கிய காரணம் பூமியின் கீழ் இருக்கும் நிலக்கரி ஆக்ஸிஜனோடு இணைந்து தீயாக மாறுகிறதாம். இந்த நெருப்பை அணைக்க பல முயற்சிகள் எடுத்தும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

இதே நிலை நீண்ட நாட்களுக்கு நீளும் படசத்தில் நிலத்தின் அடுக்குகளில் சரிவு ஏற்பட்டு மிகப்பெரிய குழிகள் ஏற்பட்டு கட்டிடங்கள் சரிந்து விழும் ஆபத்தும் நேரிடலாம் என எச்சரித்துள்ளனர்.

Related news :

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here