புலி சுறா தாக்கி ஸ்கூபா விளையாடிய பெண் மரணம்!

0
165
Scuba Diving Sport Played Indian Girl Died Shark Attack

(Scuba Diving Sport Played Indian Girl Died Shark Attack)

அமெரிக்காவின் கோஸ்டா ரிக்கா தீவுக்கு கடந்த வியாழக்கிழமை 18 பேர் அடங்கிய குழு ஒன்று ஸ்கூபா நீச்சல் விளையாடுவதற்காக சென்றது.

அந்த குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 48-வயது பெண்ணான ரோஹினா பந்தாரியும் ஒருவர்.

இவர் அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான வில்பர் ரோஸ் தொடங்கிய டபில்யூ.எல். ரோஸ் & கோ நிறுவனத்தின் மூத்த இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.

அவர்கள் சென்ற பகுதி அதிக அளவிலான சுறாக்கள் காணப்படும் பகுதியாகும்.

இந்நிலையில், ரோஹினா பந்தாரி ஸ்கூபா நீச்சல் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது ஒரு புலி சூறா அவரை தாக்கியது.

Scuba Diving Sport Played Indian Girl Died Shark Attack

இதையடுத்து அவரது பயிற்சியாளர் அவரை காப்பாற்ற முயன்றார். இந்த முயற்சியின் போது அவரையும் சுறா தாக்கியது. இந்த தாக்குதலில் இருவரும் பலத்த காயமடைந்தனர். ரோஹினா பந்தாரியின் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டன.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அமெரிக்கா: ஸ்கூபா விளையாட்டின் போது விபரீதம் - புலி சுறா தாக்கி இந்திய வம்சாவளி பெண் பலி

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரோஹினா பந்தாரி நேற்று உயிரிழந்தார்.

விளையாட சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டதாம்.

Related news :

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here