நடிகர் சிபிராஜ் முத்தக்காட்சிகளில் ஏன் நடிப்பதில்லை தெரியுமா?

0
112
Actor Sibiraj Says Reason Avoids Hot Kissing Movie Scenes

(Actor Sibiraj Says Reason Avoids Hot Kissing Movie Scenes)

நடிகர் சிபிராஜ் நடிகர் சத்தியராஜின் வாரிசு நடிகர். பல தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் அப்பாவை போல மகனால் பெரிதாக பிரகாசிக்க முடியவில்லை.

சிபிராஜ் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் சத்யா. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி டைரக்டு செய்துள்ளார். நடிகர் சத்யராஜ் தயாரித்துள்ளார். சத்யா படக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்

இதன் போது சத்தியராஜ் கூறியதாவது,

தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய படம் சனம். அந்த படத்தை எனது மனைவியும், மகளும் பார்த்தனர். அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அந்த படத்தை தமிழில் சிபிராஜை நடிக்க வைத்து தயாரிக்கலாம் என்று தெரிவித்தனர். அதனால் தான் இதை தமிழ் கொண்டு வருகின்றோம் என கூறினார்.

நடிகர் சிபிராஜ் கூறும்போது,

Actor Sibiraj Says Reason Avoids Hot Kissing Movie Scenes

“எனது 4 வயது மகன், நான் நடித்த எல்லா படங்களையும் பார்க்கிறான். இதனால் நான் கதாநாயகிகளுடன் நெருக்கமான காதல் காட்சிகளிலும் முத்தக் காட்சிகளிலும் நடிப்பதை தவிர்க்கிறேன்” என்றார்.

அட இவர் நடிக்கும் படங்களை இவரின் மகனாவது ஆர்வத்துடன் பார்க்கிறாரே. என்றாலும் மகனில் சிபிராஜ் வைத்திருக்கும் நல்லெண்ணம் போற்றத்தக்கது.

Related news :

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here