சுயேச்சையாக போட்டியிடும் இளைஞரை ஆதரித்து வெற்றியடையச் செய்வேன் : விஷால் கொந்தளிப்பு

0
173
Vishal political entrance,Tamil actor vishal political ,Tamil actor vishal joins politics,Vishal nomination rejected

(Vishal political entrance)

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான  விஷாலின்  வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில்  அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார் .    ஒரு ஜனநாயக நாட்டில்    சுயேச்சையாக போட்டியிடும்  உரிமை இல்லையா எனவும் கொந்தளித்துள்ளார் .மேலும் சுயேச்சியாக போராடும் இளைஞரை ஆதரித்து வெற்றியடையச் செய்து நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்வேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Vishal nomination rejected

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நபரை அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பத்து பேர் முன்மொழிய வேண்டும்.

ஆனால், விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்ததாக காணப்படும் பத்து பெயர்களில் விஷாலை முன்மொழியாத இரு பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தெரிவித்துள்ளார். தேவையான முன்மொழிவோர் எண்ணிக்கை இல்லாத காரணத்தால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நடிகர் விஷால் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் அதிகாரி என்னுடைய மனு ஏற்கப்பட்டதாக சொன்னதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர் அறிவித்ததை கேட்டு அனைவரும் கைதட்டி வரவேற்றனர். மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் இத்தனை சிக்கல்கள் இருக்கும் என்று நினைக்கவில்லை. படத்தில் நடக்கும் காட்சிகளைப் போல் நிமிடத்திற்கு நிமிடம் திருப்பங்கள் ஏற்பட்டன.

மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் இது தான் கதியா? ஜனநாயக நாட்டில் சுயேச்சை வேட்பாளர் போட்டியிடக் கூடாதா? கடந்தமுறை பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்தானது, இந்தமுறை மிரட்டல் விடுக்கும் அளவிற்கு கீழ்த்தரமாக போயுள்ளது. டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்டாக இன்று நடந்துள்ளது. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. எதற்காக என்னுடைய மனு நிராகரிக்கப்பட்டது என புரியவில்லை.

என்னைக் கண்டு ஏன் அச்சப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பின்புலத்தில் யார் உள்ளார்கள் என்று எனக்கு தெரியவில்லை. வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்படும்.

முன்மொழிந்தவர்கள் இரண்டு பேரின் வீட்டின் முன்பு ஆளும்கட்சியின் ஆட்கள் இருந்து கொண்டு மிரட்டுகின்றனர். முன்மொழிந்தவரை மிரட்டியது மதுசூதனன் ஆட்களா என்பது அவரிடம் கேட்டால் தான் தெரியும். சுயேச்சையாக போட்டியிடும் இளைஞர் ஒருவரை ஆதரித்து அவரை வெற்றியடையச் செய்வேன். அவர் மூலம் நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்வேன்.

இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Related news :

Our Other Websites :

Keyword:Vishal political entrance

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here