நமீதாவுக்கு திருமண வாழ்க்கை இப்படியாக உள்ளதாம்!

0
131
Actress Namitha Open Interview Says Newly Marriage Life

(Actress Namitha Open Interview Says Newly Marriage Life)

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நமீதா சமீபத்தில் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், திருமண வாழ்க்கை குறித்து மனம்திறந்துள்ளார்.

நமீதா அவரது காதலர் வீரேந்திர சவுத்ரியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு நமீதா மகிழ்ச்சியாக இருக்கிறார்.

Actress Namitha Open Interview Says Newly Marriage Life

இந்த நிலையில் தனது காதல் திருமணம் பற்றி நமீதா அளித்த பேட்டி….

“ நான் முதன்முதலாக வீரேந்திர சவுத்ரியை சந்தித்த போது எங்களிடையே நிறைய ஒற்றுமை இருப்பது தெரியவந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு வந்தபோது, அதில் பங்கேற்கும்படி அவர் தான் ஊக்கம் அளித்தார்.

நான் அவரை 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ந்தேதி சந்தித்தேன். அதன் பிறகு ஒரே வருடத்தில் அவரை திருமணம் செய்து இருக்கிறேன்.

இது எல்லாமே கனவு போல் இருக்கிறது. ஒரு வருடம் தான் அவரைத் தெரியும். என்றாலும், ஜென்ம ஜென்மமாய் அவருடன் பழகியது போல் இருக்கிறது.

கடற்கரையில் வைத்து அவர் தனது காதலை என்னிடம் சொன்னார். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை.

அவருக்கு பதில் சொல்லும் போது மகிழ்ச்சி மேலிட நான் அழுது விட்டேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நான் வெளியே வந்த அன்று தான் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று வீர் என்னிடம் கேட்டார். அவர் கேட்காமல் இருந்திருந்தால் நானே கேட்டிருப்பேன்”.

இவ்வாறு அனந்தமாக கழிகிறதாம் நமிதாவின் திருமண வாழ்க்கை.

Related news :

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here