வரலாற்றையே மாற்றியமைத்த ரத்னகல் சிற்பம்

0
398
Gemstone sculpture discovery,Miracle gemstone technic ,Greek Archaeology Gemstone sculpture,Gemstone technic ,Gemstone sculpture history

(Gemstone sculpture history)

அமெரிக்காவின் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் கிரேக்க நாட்டின் பைலோஸ் நகரில் ஒரு கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. வெண்கல காலத்தைச் சேர்ந்த இந்தக் கல்லறையில், 2015-ம் ஆண்டு பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. நகைகள், பாதுகாப்பு கவசங்கள், ஆயுதங்கள், விலை உயர்ந்த கற்களில் செய்யப்பட்ட சிற்பங்கள் ஆகியவை கிடைத்தன.

சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தப் பொருட்களில் இருந்து, மிக அழகான சிற்பம் ஒன்று கிடைத்திருக்கிறது. 3.6 செ.மீ. அளவுள்ள ரத்தினக்கல் ஒன்றில் இந்தச் சிற்பம் செதுக்கப்பட்டிருப்பதுதான் உலகை வியக்க வைத்திருக்கிறது. உருப்பெருக்கி மூலம் பார்த்தால்தான் சிற்பம் தெரியும்.

Gemstone sculpture discovery

சுண்ணாம்புப் பொருளால் மூடப்பட்ட இந்த ரத்தினக்கல்லை மிகக் கவனமாகச் சுத்தம் செய்து, சிற்பத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் மூலம் கலைகளைப் பற்றிய வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தச் சிற்பத்தில் இருவர் நேருக்கு நேர் வாள் சண்டையிடுகிறார்கள்.

இன்னொருவர் சண்டையில் தோற்று கீழே விழுந்து கிடக்கிறார். வீரர்கள் திடகாத்திரமான உடலுடன் காட்சி தருகிறார்கள். எந்தத் தொழில் நுட்பமும் இல்லாத காலகட்டத்தில், மிகச் சிறிய இடத்துக்குள் இவ்வளவு நுணுக்கமான ஒரு சிற்பத்தை எப்படி வடிக்க முடிந்தது என்று எல்லோரும் வியக்கின்றனர். “கிரேக்க கலைகளைப் பற்றிய வரலாறு, இப்போது இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னோக்கிச் சென்றுவிட்டது. கிரேக்கத்தின் பாரம்பரியம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டதை இந்தச் சிற்பம் எடுத்துக்காட்டிவிட்டது. சில நுட்பமான விஷயங்கள் அரை மில்லிமீட்டருக்குள் வடிக்கப்பட்டதை என்னவென்று சொல்வது! இனி வரக்கூடிய வரலாற்றுப் புத்தகங்களில் சிற்பக் கலையின் வரலாறு மாற்றி எழுதப்படும்.

கல்லறையில் இருந்து 3 ஆயிரம் பொருட்கள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் இந்த ‘சண்டை ரத்தினக்கல்’ போன்று 50 கற்கள் கிடைத்திருக்கின்றன. இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் இருந்தும் உலகத்துக்கு சுவாரசியமான விஷயங்கள் கிடைக்கலாம்” என்கிறார் கிரேக்க தொல்லியல் துறை பேராசிரியர் ஜேக் டேவிஸ்.

Related news :

Our Other Websites :

Keyword:Gemstone sculpture history

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here