வில்லனுக்கே கட்டிப்பிடிக்க கற்றுக்கொடுத்த நடிகை!

0
213
Actor Siddhartha Shankar Says Cinema Field Experience

(Actor Siddhartha Shankar Says Cinema Field Experience)

சித்தார்த்தா சங்கர் கடந்த வாரம் வெளியான சத்யா படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.

இவர் தனது சினிமா பயணத்தை பற்றி பேசியுள்ளார்.அவர் கூறியதாவது,

நான் மலேசியாவில் பிறந்து வளர்ந்தவன். அப்பா வேலூர், அம்மா மலேசியா அங்கேயே டாக்டருக்கு படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு நடிக்க ஆசை, அதனால் பிடிவாதமாக நடிக்க வந்து விட்டேன்.

நாசர் சாரிடம் முறையாக நடிப்பு கற்றுக்கொண்டேன். நான் போகும் ஜிம்முக்கு விஜய் ஆண்டனி வருவார். அவரிடம் வாய்ப்பு கேட்டு வைத்திருந்தேன். சைத்தான் படத்தில் நடிக்க வைத்தார்.

படத்துக்காக மொட்டை அடித்தேன். அந்த படத்தைப்பார்த்து விட்டு எனக்கு ஐங்கரன் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அது படம் முழுக்க வரும் வில்லன் ரோல்.

அந்த படம் நடித்து கொண்டிருக்கும் போதே சத்யா படத்தின் ஆடிசன் போனேன். என் நடிப்பைப் பார்த்ததும் சிபிராஜூக்கு பிடித்து போனது. அதனால் ஓகே பண்ணினார். படத்தில் வில்லன் ரோல் என்றாலும் முக்கியமான ரோல் அது.

ரம்யா நம்பீசன் எனக்கு மனைவியாக நடித்தார். அவருடன் நெருக்கமான கட்சியில் நடிக்க கூச்சமாக இருந்தது. ஆனால் அவர்தான் எப்படி கட்டிபிடிக்க வேண்டும் எப்படி வலிக்காமல் கையை பிடிக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்.

நாயகனாக நடிப்பதை விட வில்லனாக நடித்தால் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படலாம். ரசிகர்கள் கவனத்துக்கு வரமுடியும். அதனால் ரகுவரன் மாதிரியான மெஜஸ்டிக்கான வேடத்தில் நடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related news :

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here