டோக்கன் கொடுத்து வாக்காளர்களுக்கு குக்கர் கொடுத்த தினகரன்!

0
250
Tamil Nadu RK City Election TTV Dhinakaran Distributed Cooker

(Tamil Nadu RK City Election TTV Dhinakaran Distributed Cooker)

தமிழ் நாட்டில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் களம் இறங்கியுள்ளார்.

அவர் போட்டியிடும் குக்கர் சின்னம் தொகுதி முழுவதும் பிரபலமாகிவிட்டது.

எங்கு பார்த்தாலும் பெண்கள் குக்கருடன் வலம் வரும் காட்சியை பார்க்க முடிகிறது.

இதனையடுத்து அருகில் உள்ள குக்கர் கடைகளில் தினகரன் தரப்பு டோக்கன் மூலம் வாக்காளர்களுக்கு குக்கர் வழங்கி வருவதாக புகார் எழுந்தது.

Tamil Nadu RK City Election TTV Dhinakaran Distributed Cooker

இதனையடுத்து வருமான வரித்துறையினரும், தேர்தல் ஆணைய பறக்கும் படையும் சேர்ந்து ஆர்கே நகருக்கு வெளியே உள்ள ராயப்பேட்டையில் உள்ள குக்கர் கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த கடைகளில் இருந்து டோக்கனோ அல்லது தினகரன் தரப்பு வாக்காளர்களுக்கு குக்கரோ வழங்கியதாக ஆதாரம் கிடைத்தால் அவர் தேர்தலில் போட்டியிடுவது கடினம் என கூறப்படுகிறது.

Related news :

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here