குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு அரச பேரூந்தை திருடி சென்ற நபர்

0
308
Srilanka transport ministry bus robbery

(Srilanka transport ministry bus robbery )

இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்கு சொந்­த­மான பஸ் வண்­டி­யொன்­றினைக் கடத்­திக்­கொண்டு பய­ணித்த சந்­தேக நபர் ஒரு­வரை நிட்­டம்­புவ பொலிஸார் கைது செய்த சம்­பவம் ஒன்று பதி­வா­கி­யுள்­ளது. இச்­சம்­பவம் கடந்த வெள்­ளி­யன்று மாலை வேளையில் பதி­வா­ன­தா­கவும் சம்­பவம் தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை கம்­பஹா பொலிஸார் முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் மேல் மாகா­ணத்தின் வட பிராந்­திய பொலிஸ் உய­ர­தி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

கெஸ்­பேவ டிப்­போ­வுக்கு சொந்­த­மான பேரூந்து  ஒன்று கடந்த வெள்­ளி­யன்று மாணவக் குழு ஒன்றை அழைத்துச் செல்­வ­தற்­காக கெஸ்­பே­வையில் இருந்து வெயாங்­கொடை பத்­த­ல­கெ­தர வித்­யா­லோக்க மகா வித்­தி­யா­லயம் நோக்கி சென்­றுள்­ளது.

இதன்­போது அந்த பேரூந்தின்  சார­தியும் நடத்­து­னரும் கொழும்பு – கண்டி பிர­தான வீதியில் அளுத்­கம போக­முவ பகு­தியில் அமைந்­துள்ள உண­வகம் ஒன்றின் முன்­பாக தேநீர் அருந்­து­வ­தற்­காக பேரூந்தை  நிறுத்தி விட்டு உண­வகத்தின் உள்ளே சென்­றுள்­ளனர்.

சார­தியும் நடத்­து­னரும் இவ்­வாறு தேநீர் அருந்திக் கொண்­டி­ருந்த போது தங்­க­ளது பேரூந்தை  பிறி­தொரு நபர் செலுத்­து­வதை அவ்­வி­ரு­வரும் அவ­தா­னித்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து உடன் செயற்­பட்­டுள்ள சார­தியும் நடத்­து­னரும் 119 அழைப்பு இலக்கம் ஊடாக பொலி­ஸா­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளனர். அத்­துடன், தனியார் பேரூந்து  ஒன்றில் ஏறி கடத்திச் செல்­லப்­படும் குறித்த போக்கு வரத்து சபை பஸ்ஸை பின் தொடர்ந்­துள்­ளனர். எனினும், அந்த  பேரூந்தை    அவர்­களால் பின் தொடர­மு­டி­யாமல் போயுள்­ளது.

இந்­நி­லையில் 119 அழைப்பு இலக்கம் ஊடாக கிடைத்த தக­வ­லுக்கு அமைய நிட்­டம்­புவ பொலிஸ் நிலை­யத்தின் போக்­கு­வ­ரத்து பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் கிங்ஸ்லி ஹேரத் மற்­றொரு கான்ஸ்­ட­பி­ளுடன் மோட்டார் சைக்­கிளில் பஸ்ஸை துரத்திச் சென்­றுள்­ள­துடன் அதனை நிறுத்­து­மாறு சமிக்ஞை விடுத்­துள்­ளனர்.

எனினும், அந்த பேரூந்து  நிறுத்­தப்­ப­டா­மையால் மோட்டார் சைக்­கிளை குறுக்­காக நிறுத்தி பேரூந்தை  நிறுத்தச் செய்­துள்­ளனர்.
இத­னை­ய­டுத்து பேரூந்தை  கைப்­பற்­றிய பொலிஸார் சந்­தேக நபரைக் கைது செய்­துள்­ளனர். தங்­கோ­விட்ட பகு­தியில் வைத்தே இவ்­வாறு பேரூந்து மீட்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு கைது செய்­யப்பட்ட சந்­தேக நப­ரிடம் பொலிஸார் முன்­னெ­டுத்த ஆரம்ப கட்ட விசா­ர­ணையின் போது குடும்­பத்­தா­ருடன் சுற்­றுலா பயணம் செய்­வ­தற்­காக பேரூந்தை  கடத்­தி­ய­தாக தெரி­வித்­துள்ளார்.

சந்­தேக நபர் மன நிலை பாதிக்­கப்­பட்­ட­வ­ராக இருக்க வேண்டும் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்றனர். சந்­தேக நபர் பொலிஸ் கூண்டில் இருந்த போதும் புரி­யாத மொழி­களில் பேசிக்­கொண்டு விசில் அடித்த வண்ணம் இருந்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.
பேரூந்து  கடத்­தப்­பட்ட பிர­தேசம் கம்­பஹா பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்­டதால் பேரூந்தும்  சந்­தேக நபரும் கம்­பஹா பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்பட்­டுள்­ளனர்.

சம்­பவம் தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, கம்­பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் முதித்த புசல்ல ஆகி­யோரின் மேற்­பா­ர­வையில் கம்­பஹா பொலிஸ் நிலைய குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் தர்­ம­சூ­ரி­யவின் கீழ் மேல­திக விசா­ர­ணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related news :

Our Other Websites :

Keyword:Srilanka transport ministry bus robbery

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here