தன்னை கிண்டல் செய்த அருவி படம் பற்றி லட்சுமி ராமகிருஷ்ணனின் பதிலடி!

0
210
Vijay Tv Lakshmi Ramakrishnan Says Aruvi Movie Good

(Vijay Tv Lakshmi Ramakrishnan Says Aruvi Movie Good)

லட்சுமி ராமகிருஷ்ணன் திரைப்பட நடிகையும், இயக்குநர் என பல துறைகளில் கலக்கி வருபவர்.

இவர் பிரபல தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார்.

இதில் இவர்தொகுப்பாளராக நிகழ்ச்சியில் பல குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளை விவாதமாக எடுத்து நேரடியாக விவாதங்கள் நடப்பதுண்டு.

சமீபத்தில் வெளிவந்த அருவி படம், லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் நிகழ்ச்சியின் மறுப்பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

Vijay Tv Lakshmi Ramakrishnan Says Aruvi Movie Good

இப்படத்தில் அதிதி பாலன் நாயகியாக நடித்திருந்த இந்தப் படத்தில் கவிதா பாரதி, லட்சுமி கோபால்சாமி, அஞ்சலி வரதன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

இந்தப் படம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்,

எனது நிகழ்ச்சியையும், என்னையும் கிண்டல் செய்தாலும் அருவி நல்ல படம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் அருவி படம் “பல மாதங்களுக்கு முன் தணிக்கை ஆன போது இந்த படம் பற்றி தெரிந்து கொண்டேன்.

படம் பார்த்தவர்கள், இது அற்புதமான படம். தயவு செய்து எதுவும் எதிராக எதுவும் செய்ய வேண்டாம் என்றார்கள். நல்ல இயக்குநர், நிகழ்ச்சிப் பின்னணியில் நல்ல படத்தை எடுத்துள்ளார்.

பெண்ணியப் படமாக எடுத்திருந்தாலும், அடக்குமுறைக்கு, அநீதிக்கு ஆளான பெண்களுக்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்ச்சியை அவர் கிண்டல் செய்துள்ளதாக லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related news :

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here