கீர்த்தி சுரேஷின் புதிய லுக் :கலாய்த்த நெட்டிசன்கள்

0
142
Keerthy Suresh different new look today latest

(Keerthy Suresh different new look today latest)

நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்களே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். நேற்று மாலை நடைபெற்ற ‘அஞ்ஞாதவாசி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷின் தோற்றம்தான் பலரையும் வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது. கீர்த்தி சுரேஷுக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்தவரையும், மேக்கப் செய்தவரையும் தான் அவரது ரசிகர்கள் தேடி வருகிறார்களாம், பாவம்.

Keerthy Suresh different new look today latest

தமிழ் சினிமாவில் சமீப காலத்திய அறிமுகங்களில் ரசிகர்களைக் கவர்ந்தவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் பேசத் தெரிந்த ஒரு சில நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். இவர் நடிகை மேனகாவின் மகள் ஆவார்.

கிண்டலுக்கு உள்ளாகும் கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ் அறிமுகமானதிலிருந்தே அதிகமாக கிண்டலடிக்கப்படும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவரையும், அவரது சிரிப்பையும் கலாய்த்து பல மீம்கள் சமூக வலைதளங்களில் உலவித் திரிகின்றன.

மீம்ஸ் உருவாக்குபவர்களுக்கு வரப்பிரசாதமாக அவரும் நடந்து கொள்வதுதான் ஆச்சரியம். தெலுங்கில் பவன் கல்யாணுடன் அவர் ஜோடியாக நடிக்கும் ‘அஞ்ஞாதவாசி’ படத்தின் இசை வெளியீடு நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது

கீர்த்தி சுரேஷுக்கு நேற்றைய நிகழ்ச்சியில் ஆடை அலங்காரம் செய்தவரையும், மேக்கப் செய்தவரையும் மீம் கிரியேட்டர்கள் கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும். ஏனென்றால், அடுத்த சில நாட்களில் கீர்த்தி சுரேஷின் இந்த தோற்றம் மீம் கிரியேட்டர்களுக்கு செம தீனியாக இருக்கப்போகிறது.

Related news :

Our Other Websites :

Keyword:Keerthy Suresh different new look today latest

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here