சசிகலாவா அல்லது ஜெயலலிதாவா? பாவம் இம்ரான்கானே கன்பியூஸ் ஆகிட்டாரு!

0
81

(Pakistan Cricket Ex Captain Tweet Says Sasikala Died)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் நாட்டின் தேரிக் இ இன்சாஃப் என்ற அரசியல் கட்சியின் தலைவருமாக இருப்பவர் இம்ரான்கான்.

Image result for Pakistan Cricket Ex Captain ImranKhan

இவர் தனது டுவிட்டரில் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகையும், அரசியல்வாதியுமான சசிகலா இறந்துவிட்டார் என்றும், அவருடைய வீட்டில் இருந்து கிலோ கணக்கில் பணம், நகைகள் கைப்பற்றப்பட்டதாகவும் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த தவறான டுவீட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் அரசியலே சரியாக தெரியாத நிலையில் அவர் ஏன் இந்திய அரசியல் குறித்த டுவீட்டை போட வேண்டும் என்று நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இதனையடுத்து ஒரு பத்திரிகையாளர் இம்ரான்கானுக்கு இதனை சுட்டிக்காட்டி, இறந்தது ஜெயலலிதா என்றும், சசிகலா தற்போது பெங்களூரு சிறையில் இருப்பதாகவும் தெரிவித்தார்

இதனையடுத்து தனது தவறை புரிந்து கொண்ட இம்ரான்கான் உடனே தனது டுவீட்டை டெலிட் செய்துவிட்டார். இருப்பினும் இந்த டுவீட்டை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்த ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து அவரை கலாய்த்து வருகின்றனர்.

Related news :

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here