தாயை ஒழுங்காக கவனிக்காததால் தனது இரண்டு மனைவிகளையும் கொன்ற கணவன்

0
90
Rajasthan Husband-Arrested Burning Two Wife

(Rajasthan Husband-Arrested Burning Two Wife)

ராஜஸ்தானில் தனது தாயை சரியாக கவனித்துக்கொள்ளாத 2 மனைவிகளை காருக்குள் பூட்டி தீ வைத்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தன

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் தீபாராம். இவருக்கு மாலிதேவி (வயது 27), தரியாதேவி (25) ஆகிய 2 மனைவிகள் இருந்தனர்.

ஆனால், மனைவிகள் இருவரும் தீபாராமின் தாயாரை சரியாக கவனிக்கவில்லை. தனது தாயை 2 மனைவிகளும் சந்தோ‌ஷமாக வைத்துக் கொள்ளவில்லையே? என்று தீபாராம் கோபம் அடைந்தார். எனவே, இருவரையும் தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

இதற்காக அவர்களிடம் உங்களுக்கு நகை வாங்கி தருகிறேன் என கூறி ஏமாற்றி தனது காரில் அழைத்து சென்றார். பக்கத்து மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஜலோர் பகுதிக்கு காரை ஓட்டி சென்றார்.

அப்போது காருக்குள் வைத்தே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதில் ஒரு மனைவி காரில் இருந்து கீழே இறங்கி ஓடி தப்பிக்க முயன்றார். ஆனாலும் அவரை காருக்குள் இழுத்து போட்டார்.

பின்னர் சிறிது தூரம் கார் சென்றது. அங்கு காரை நிறுத்தி விட்டு தீபாராம் கீழே இறங்கினார். காரின் 4 கதவுகளையும் பூட்டி விட்டார். உள்ளே 2 மனைவிகளும் சிக்கி இருந்தனர். அவர்கள் உள்ளே இருந்த நிலையிலேயே காருக்கு தீ வைத் தார். இதில், 2 பேரும் உடல் கருகி உயிர் இழந்தனர்.

இது தொடர்பாக ராஜஸ் தான் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபாராமை கைது செய்தனர்.

Related news :

Our Other Websites :

Keyword:Rajasthan Husband-Arrested Burning Two Wife

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here