மதிப்பு மிக்க பிரபலங்கள் பட்டியல் வெளியிடு :ஷாருக்கானை பின் தள்ளி விராட் கோஹ்லி முதலிடம்

0
120
Virat Kohli dislodges Shah Rukh Khan valuable celebrities list,Bolly wood actor shah ruhk khan ,Bollywood king khan shah rukh khan ,Virat kohli ,Valuble celebrities list

(Virat Kohli dislodges Shah Rukh Khan valuable celebrities list )

இந்தியாவின் மதிப்பு மிக்க பிரபலங்களின் பட்டியல் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றது .அந்த வகையில் இந்த வருடமும் அந்த பட்டியல் வெளியிடப்பட்டது .

வருடந்தோறும் இந்தியாவின் மதிப்பு மிக்க பிரபலங்களின் பட்டியலை டப் அண்ட் பெல்ப்ஸ்( Duff & Phelps.) என்ற நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிட்ட பட்டியலில் கோலி இடம் பிடித்து உள்ளார்.

2017 ஆம் ஆண்டின் இந்தியாவின் மதிப்பு மிக்க பிரபலங்களின் பட்டியலில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதலிடத்தை பிடித்து உள்ளார்.
கடந்த வருடம் முதலிடத்தில் இருந்த ஷாரூக்கானை இரண்டாவது இடத்திற்கு தள்ளி, விராட் கோலி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அவரின் பிராண்ட் மதிப்பு 144 மில்லியன் ஆகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 54 சதவீதம் கோலியின் பிராண்ட் மதிப்பு அதிகரித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஷாரூக்கான் உள்ளார். இவரது பிராண்ட் மதிப்பு 106 மில்லியன். கடந்த ஆண்டை விட இவரின் வளர்ச்சி 20 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இவர்களை தவிர அக்‌ஷய் குமார், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.

முன்னாள் கேப்டன் டோனி 13-வது இடத்தை பெற்றுள்ளார். பி.வி சிந்து இந்த பட்டியலில் 15 ஆவது இடத்தில் உள்ளார். தனியார் நிறுவன பொருட்களை விளம்பரப்படுத்துவதன் மூலமும், விளம்பர தூதுவர்களாக இருப்பதன் மூலமும் பிரபலங்களுக்கு கிடைக்கும் பண மதிப்பினை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related news :

Our Other Websites :

Keyword:Virat Kohli dislodges Shah Rukh Khan valuable celebrities list

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here