மெழுகுச்சிலையாக வலம் வர போகும் சன்னி : டெல்லியில் நிறுவப்படும் சன்னி லியோனின் மெழுகு சிலை

0
116

(Sunny Leone wax statue latest news)

கனடாவைச் சேர்ந்த போர்னோகிராபி நடிகை சன்னி லியோன் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார். இப்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார் சன்னி லியோன். இவரது மெழுகு சிலை டெல்லியில் நிறுவப்பட உள்ளது. இந்தத் தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.

இந்திய சினிமாவின் கவர்ச்சிக்கன்னியாக வலம் வருபவர் சன்னிலியோன். இவர் தற்போது தென்னிந்திய மொழிகளில் தயாராகும் ‘வீரமாதேவி’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இனிமேல் இவரை ரசிகர்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால், நிஜத்தில் அல்ல தத்ரூபமான மெழுகு சிலையாக

மேடம் டுசாட் மியூசியத்தில் உலகம் முழுவதும் பிரபலங்களின் தத்ரூப சிலையை வைத்திருப்பார்கள். ஏற்கெனவே அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், சச்சின் என பல பிரபலங்களின் சிலை இங்கு உள்ளது.

Sunny Leone wax statue latest news

அந்த வரிசையில் சன்னி லியோனின் சிலையும் டெல்லியில் உள்ள இந்த மியூசியத்தில் வைக்கப்பட உள்ளது. சன்னி லியோனின் மெழுகு சிலை உருவாக்கப்பட உள்ளது. சிலை நிறுவப்பட்ட பின் ரசிகர்கள் எப்போது வேண்டுமானாலும், சிலையுடன் நின்று செல்ஃபி எடுக்கலாம்.

சன்னி லியோனின் தத்ரூப சிலையை உருவாக்குவதற்காக அவரது கருவிழி, முடி நிறம், கை,கால், உடல் அளவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை ஒரு வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார் சன்னி லியோன்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Sunny Leone wax statue latest news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here