ஈழத்தின் பாப் இசைச் சக்கரவர்த்தி ஏ.இ.மனோகரன் காலமானார்!

0
219
Pop Music King A E Manoharan Died 73 Age Chennai

(Pop Music King A E Manoharan Died 73 Age Chennai)

இலங்கையின் பிரபல பாப் இசை பாடகரான சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் (73 வயது) சென்னையில் நேற்று (22.01.2018) காலமானார்.

ஏ.இ.மனோகரன் இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற பொப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார்.

பல மொழிப் பாடல்கள் பாடுவதிலே திறமை வாய்ந்தவர். பாப் இசைச் சக்கரவர்த்தி எனப் பாராட்டுப் பெற்றவர். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

Image may contain: 1 person, smiling, beard, closeup and outdoor

இவர் பாடிய சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிடா மாலுகெனாவா… என்ற பைலா பாடல் இலங்கை, இந்திய ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது.

இவர் சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்படங்களிலே நடித்தும் பாடியும் வந்தார்.

தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ள மனோகர் தமிழ் டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார். நடிகர் கமலஹாசனுடன் ‘மனிதரில் இத்தனை நிறங்களா’ படத்தில் பாடி நடித்திருக்கிறார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சென்னையில் வளர்ப்பு நாய்களின் கொலைவெறி தாக்குதலில் எசமானி பலி!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here