இந்தியன் 2 க்கும் தைவான் நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? இரசிகர்களை குழப்பும் சங்கர்!

0
258
Director Shankar Launch Indian 2 Balloon Taiwan Fans Confused

(Director Shankar Launch Indian 2 Balloon Taiwan Fans Confused)

தைவான் நாட்டுக்கும், ‘இந்தியன் 2’ படத்திற்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியாமல் குழம்பியுள்ளனர் சினிமா ரசிகர்கள்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஏப்ரல் மாதம் ரிலீஸ் என்பதால், ஒட்டுமொத்த படக்குழுவும் விறுவிறுப்பாக வேலை பார்த்து வருகிறது. ஏற்கெனவே ரிலீஸ் திகதியை சிலமுறை மாற்றிவிட்டதால், இந்தமுறை மாற்றக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

‘2.0’ படத்தைத் தொடர்ந்து, கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ படத்தைத் தொடங்குகிறார் ஷங்கர். இந்தப் படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்க இருக்கிறது.

‘2.0’ படத்தில் தன் பணிகள் முடிந்துவிட்டதால், அடுத்ததாக ‘இந்தியன் 2’ படத்தின் கவனம் செலுத்தி வருகிறார் ஷங்கர்.

இந்நிலையில், தன் குழுவினருடன் சேர்ந்து ஒரு ஹீலியம் பலூனைப் பறக்க விட்டுள்ளார் ஷங்கர்.

Image result for indian-2-in-taiwan

அதில், ‘இந்தியன் 2 இன் தைவான்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, ‘இந்தியன் 2’ படத்துக்கும், தைவான் நாட்டுக்கும் என்ன சம்பந்தம் என சினிமா ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here