நான் படுக்கையில் இருக்கும் போது டுவிட் செய்வது தான் மிகவும் பிடிக்கும் : ட்ரம்பின் டுவிட்டர் அனுபவம் …..

0
86
Donald trump mostly tweet bed room latest news

(Donald trump mostly tweet bed room latest news)

அமெரிக்க அதிபர்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விஷயத்திற்கு பிரபலம் ஆனார்கள். மக்களின் அந்தரங்கத்தில் தலையிட்டதாக ஜார்ஜ் புஷ் விமர்சிக்கப்ட்டார். ஒசாமா கதையை முடித்ததற்காக ஒபாமா பேசப்பட்டார். ஆனால் டொனால்ட் டிரம்ப் அவரது டிவிட்களுக்காக பேசப்படுவார் என்று யாருமே நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள். அவரது டிவிட்கள் அனைத்தும் அத்தனை பிரபலம். எல்லாமே எதாவது ஒரு அதிர்ச்சி செய்திகளுடன் மக்களை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Donald trump mostly tweet bed room latest news

அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய கொள்கைகளை டிவிட்டர் மூலம் வெளிப்படுத்துவதாக கருத்து நிலவி வருகிறது. முக்கியமாக பாகிஸ்தானிற்கு எதிராகவும், வடகொரியாவிற்கு எதிராக இவர் வெளியுறவுக் கொள்கைகளை கூட டிவிட்டரில்தான் வெளியிட்டார். இது அமெரிக்காவில் அடிக்கடி விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது இதுகுறித்து டிரம்ப் பேசி இருக்கிறார். அதில் ”எனக்கு டிவிட் செய்ய பிடிக்கும். எனக்கு எதிராக வரும் கருத்துக்களுக்கு அப்படித்தான் என்னால் பதில் சொல்ல முடிகிறது. என் தரப்பு நியாயங்களை இதில் எளிதாக சொல்ல முடிகிறது” என்று குறிப்பிட்டு இருக்கிறது.

மேலும் ”எனக்கு வீட்டில் படுத்துக் கொண்டு இரவில் டிவிட் செய்ய பிடிக்கும் . பெரும்பாலும் இதற்கு நான் உதவியாளர்களை வைத்துக் கொள்வது இல்லை. அவசர நேரத்தில் மட்டுமே உதவியாளரை டிவிட் செய்ய சொல்வேன். சாப்பிடும் போது கூட டிவிட் செய்வேன்” என்றுள்ளார்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

keyword:Donald trump mostly tweet bed room latest news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here