படுக்கைக்கு வரவில்லை எனில் காலை உடைத்து விடுவேன்: நடிகையை மிரட்டிய பாலியல் இயக்குனர்

0
260
Harvey weinstein threat sex Salma Hayek latest

(Harvey weinstein threat sex Salma Hayek latest)
படுக்கைக்கு வரவில்லை என்றால் முட்டியை பெயர்த்துவிடுவேன் என்று ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகை சல்மா ஹயக்கை மிரட்டியிருக்கிறார். ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு எதிராக பாலியல் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அவர் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தற்போது தான் ஒவ்வொருவராக தைரியமாக அது குறித்து வெளியே சொல்கிறார்கள்

ஹார்வி வெயின்ஸ்டீன் தனக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சல்மா ஹயக் தெரிவித்துள்ளார். அவர் தன்னை ஒவ்வொரு முறை படுக்கைக்கு அழைத்தபோதும் மறுத்துள்ளார் சல்மா.

தான் வெயின்ஸ்டீனின் ஆசைக்கு இணங்காததால் ஃப்ரீடா படத்தில் நடிகை ஒருவருடன் நிர்வாணமாக படுக்கையறை காட்சியில் நடிக்க வைத்தார் என்று சல்மா தெரிவித்துள்ளார்.

ஹார்வி வெயின்ஸ்டீன் தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் முட்டியை பெயர்த்துவிடுவேன், கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாகவும் சல்மா தெரிவித்துள்ளார்.

வெயின்ஸ்டீன் பற்றிய உண்மையை கூறுமாறு பிரபல நாளிதழ் என்னிடம் முதலில் கேட்டபோது பயந்தேன், அழுதேன். அதன் பிறகு இப்படி கோழையாக இருக்கிறேனே என்று நினைத்து வெட்கப்பட்டேன் என்கிறார் சல்மா.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Harvey weinstein threat sex Salma Hayek latest

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here