“உன் மூஞ்சிக்கெல்லாம் நடிக்க வந்துட்டனு சிரிச்சாங்க ” பிரபல நடிகை வருத்தம்

0
95
Actress Taapsee Pannu cinema experience

(Actress Taapsee Pannu cinema experience)

தான் நடிக்க வந்த புதிதில் இயக்குனர்கள் தன்னை கேவலமாக பேசியதாக டாப்ஸி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த டாப்ஸி பாலிவுட் சென்றார். பிங்க் படம் மூலம் அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிவிட்டார்.

Actress Taapsee Pannu cinema experience

வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் திரைத்துறை பற்றி அவர் கூறியிருப்பதாவது,

ஸ்டுபிட் காரணங்களால் என்னை நிராகரித்துள்ளனர். நீ அழகாக இல்லை, கிளாமராக இல்லை, நீ ரொம்ப சீரியஸான நடிகை, நீ நடிகையாக லாயக்கில்லாதவள், நீ பெரிய ஆளின் மகள் இல்லை, உன் பெயரை வைத்து வியாபாரம் செய்ய முடியாது என்று எல்லாம் இயக்குனர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்.

என் போன்று என் தங்கை கஷ்டப்பட விட மாட்டேன். இந்த உலகில் எனக்கு என் தங்கை தான் மிகவும் பிடிக்கும். அவர் மீது அதிகம் பாசம் வைத்துள்ளேன்.

Actress Taapsee Pannu cinema experience

சினிமா துறைக்கு வராதே என்று நான் என் தங்கையிடம் கூறவில்லை. ஆனால் என் மனதில் அது தான் இருந்தது. எனக்கு நடிக்க மட்டுமே விருப்பம். முன்பு சினிமா துறையின் செயல்பாடுகள் எனக்கு தெரியாது.

வித விதமான கதாபாத்திரங்களில் நடிப்பது எப்படி, சினிமா துறையில் என் மதிப்பை கூட்டுவது எப்படி என்று தற்போது யோசிக்கிறேன். ஒன்னுமே தெரியாமல் வந்து இவ்வளவு கற்றுக் கொண்டதே பெரிய விஷயம் என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Actress Taapsee Pannu cinema experience

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here