சினிமாக்காரர்களை வைத்து 12 வருடங்களில் ரூ.1000 கோடி உழைத்த டிஜிட்டல் நிறுவனங்கள்!

0
101
India Cinema Digital companies Earn 1000 Crore 12 Years Time

(India Cinema Digital companies Earn 1000 Crore 12 Years Time)

தமிழ் திரையுலகம் தற்போது பயங்கர சிக்கலில் உள்ளது. ஒருபக்கம் ஆன்லைன் பைரஸி பிரச்சனை, ரிலீஸ் ஆன தினமே ஆன்லைனில் படம் வெளிவந்துவிடுகிறது.

இன்னொரு பக்கம் பெய்டு டுவிட்டர்கள், காசு கொடுக்காவிட்டால் இடைவேளையின்போதே படம் மொக்கை என்றும் காசு கொடுத்தால் சூப்பர் என்றும் பதிவுகள் போட்டு வருகின்றனர்,

இந்த நிலையில் ஜிஎஸ்டி, கியூப் கட்டணங்கள் உயர்வு, திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் உயர்வு, நடிகர்களின் சம்பள உயர்வு என திரைத்துறையே தற்போது தள்ளாட்டம் போட்டு வருகிறது

இந்த நிலையில் சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத கார்ப்பரேட் டிஜிட்டல் நிறுவனங்கள் கடந்த 12 ஆண்டுகளில் ரூ.1000 கோடி சினிமாக்காரர்களை வைத்து சம்பாதித்துள்ளதாக கூறுகிறார் தயாரிப்பாளர்கள் சங்க கௌரவ செயலாளர் துரைராஜ்.

அவர் கூறியதாவது: திரைப்படங்களை திரையிட வாரந்தோறும் சுமார் 9000ம் முதல் 12000ம் ரூபாய் வரை ஒவ்வொரு தியேட்டருக்கும் பணம் செலுத்தியது எங்கள் தயாரிப்பாளர்களே.

வருடத்துக்கு தமிழ்நாட்டில், உள்ள 1100 தியேட்டர்களிலிருந்தும் 12 வருடங்களில் சுமார் 600 கோடி பணத்தை டிஜிட்டல் (12000 x 52 x 1100) நிறுவனங்கள் வருவாயாகப் பெற்றுள்ளன.

விளம்பரம் திரையிடல் மூலம் 400 கோடி, ஆக 1000 கோடியை எங்கள் மூலம் சம்பாதித்த டிஜிட்டல் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்துவது அநியாயம், தர்மத்துக்கு புறம்பானது’ என்று கூறியுள்ளார். இந்த கணக்கை பார்க்கும்போது தலைசுற்றுவதாக உள்ளது. என கூறியுள்ளார்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

  • ***********************************************

    நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

     

    Tamilworldnews.com Logo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here