நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனும் அறிய நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் இர்பான் கான்

0
185
Actor Irrfan Khan effected Neuro Endocrine Tumour Disease

(Actor Irrfan Khan effected Neuro Endocrine Tumour Disease)

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான், நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான். இவர் சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில், தான் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அது உறுதியானதும் தெரிவிப்பேன் எனவும் குறிப்பிட்டு இருந்தார். நோயில் இருந்து மீள விட்டுக்கொடுக்காமல் போராடுவேன்.

என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் உறுதுணையாக உள்ளனர். என்ன நோய் என்பதை 10 நாட்களில் உறுதி செய்த பின்னர் அறிவிப்பேன் என கூறியிருந்தார். தற்போது, நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என உறுதி செய்து உள்ளார்.

Actor Irrfan Khan effected Neuro Endocrine Tumour Disease

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், “நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் நோயால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். என்னை சுற்றியிருப்பவர்களின் அன்பும், பலமும், என்னுள் இருக்கும் பலமும் என்னை நம்பிக்கைக்கு கொண்டு வந்து உள்ளது.

நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இதிலிருந்து மீள்வதற்காக சிகிச்சைக்கு வெளிநாடு செல்லவிருக்கிறேன். எல்லோரும் தங்களுடைய அன்பையும், வாழ்த்தையும் அனுப்புங்கள்” என தெரிவித்து உள்ளார்.

Actor Irrfan Khan effected Neuro Endocrine Tumour Disease

அவருடைய இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இர்பான் கான் குணமடைய வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Actor Irrfan Khan effected Neuro Endocrine Tumour Disease

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here