பாம்பினால் பிரபலமானவர் பாம்பு கடித்து இறந்த சோகம்!

0
66
Malaysia Snake Whisperer Abu Zarin Hussin died

(Malaysia Snake Whisperer Abu Zarin Hussin died)

மலேசியாவின் கோலாலம்பூர் நகரை சேர்ந்தவர் அப் ஜாரின் ஹுசைன் (33). தீயணைப்புத்துறை வீரரான இவர் பாம்புகளை பிடிப்பதில் வல்லவர்.

பிடிப்பதோடு மட்டுமில்லாமல், பாம்பிற்கு முத்தமிடுவது, அவற்றுடன் சகஜமாக பழகுவது, அவற்றுடனே தூங்குவது என அசாத்திய செயல்களை செய்வதில் வல்லவர்.

எவ்வளவு கொடிய விஷ பாம்பாக இருந்தாலும், லாவகமாக பிடித்து அதை உயிரியல் பூங்காவில் கொண்டு விடும் பணியை அவர் செய்து வந்தார்.

பாம்புகளுடன் இவர் விளையாடும் வீடியோ யூடியூப்பில் மிகவும் பிரபலமாகும். இவரின் வீட்டிலும் பாம்புகள் சர்வ சாதரணமாக உலவும்.

Image result for Malaysia Snake Whisperer Abu Zarin Hussin died

இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கொடிய விஷம் உள்ள ராஜநாகம் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

அதை பிடிக்க அபு முயற்சித்த போது அந்த பாம்பு அவரை கடித்தது. அதனால், அவரது உடல் முழுவதும் விஷம் ஏறியது.

இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

ராஜ நாக பாம்புகளுடன் கொஞ்சி விளையாடி பொழுதை கழித்து வந்த அபு, அதே ராஜ பாம்பு கடித்து மரணமடைந்த சம்பவம் அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாம்புகளை எப்படி பிடிப்பது என்பதை அபு, அவரின் தந்தையிடம் கற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here